என வரும்.
[தென்றல் காற்று மன்மதனுக்குத் துணையாகும். அது சில பூங்கொம்புகளுக்குத்
தன் வருகையால் தளிர்த்தலைச் செய்யும் கணவனாகும்; பொருள்வயின் பிரிந்த
தலைமக்களுக்குத் தலைமகளிர் தம். பிரிவுத் துன்பத்தைத் தெரிவிக்க அனுப்பும்
தூதாகும்; தலைவன்தலைவியர் இடையே ஊடல் உண்டாகுங்கால் அவ்வூடலைத்
தணிவித்ததற்கு உரிய வாயில்களில் ஒன்றாகிய விருந்து போலவும் உதவும்.
இப்பாடலில், காற்று என்ற சாதியுள் ஒன்றாகிய தென்றல் என்ற சொல் முதலில்
வந்து பின் பல இடங்களிலும் இணைந்து பொருள் தருதலின் இது சாதி
முதல்நிலைத் தீவகம்.
தெற்கில் இருந்து வரும் காற்று - தென்றல்.
வடக்கிலிருந்து வரும் காற்று - வாடை.
குணக்கிலிருந்து வருங்காற்று - கொண்டல்
குடக்கிலிருந்து வரும் காற்று - கோடை.
இவை நான்கும் காற்று என்ற சாதியின் பொதுப் பகுப்புக்களாம்.]