பொருள் முதல்நிலைத் தீவகம் வருமாறு:
"முருகவேள் சூர்மா முதல்தடிந்தான், வள்ளி
புரிகுழல்மேல் மாலை புனைந்தான், - சரண் அளித்து
மேலாய வானேர் வியன்சேனை தாங்கினான்,
வேலான் இடைகிழித்தான் வெற்பு"
என வரும்.
[முருகவேள் சூரபன்மாவாகிய மாமரத்தை வேரோடு வீழ்த்தினான்; வள்ளியம்மையாரின் சுருண்ட கூந்தல்மேல் மாலையைச் சூட்டினான். அவன் தேவர்களுக்கு அடைக்லம் தந்து தேவர்கள்மேல் எதிர்த்து வந்த பகைவர் சேனையைத் தடுத்தான்; அவன் வேலால் குருகு என்ற பெயருடைய மலையைப் பிளந்தான்.
இப்பாடலில், முருகவேள் என்ற பொருள்பற்றிய முதனிலேச் சொல் பல இடங்களிலும் சென்று இயைந்து பொருள் தருதலின், இப்பாடல் முதல்நிலைப் பொருள் தீவக அணி.
உலகிலுள்ள பொருள்கள் உயர்திணை அஃறிணை எஙனற இரு பகுப்பின. உயர்திணையாம் தேவரும் பொருள் என்ற தலைப்பில் அடஙகுவர். ஆதலின் முருகவேள் பொருட்பெயராதல் காண்க.]
குண இடைநிலைத்தீவகம் வருமாறு:
"எடுத்த நிறைகொணா என்றலுமே, வென்றி
வடித்திலங்கு வைவாளே வாங்கத், - துடித்தனவே
தண்ஆர மார்பும், தடந்தோறும், வேல்விழியும்
எண்ணாத மன்னர்க்கு இடம்"
என வரும்.
[திட்டமிட்ட பசுக்கூட்டங்களைக் கைப்பற்றிவருமாறு வெட்சி வீரருக்கு அரசன் ஆணையிட்டஅளவில், வெற்றியைத்தரும் கூரிய வாளினை மறவர்தலைவன் கையில் ஏந்தனானாக, பகை மன்னருக்கு முத்துமாலை அணிந்த மார்பும் இடம் துடித்தது; தடந்தோள்களும் இடம் துடித்தன: வேல்போன்ற சிலந்த கண்களும் இடம் துடித்தன.
|
|
|