[பாம்பு சிவபெருமானுக்குக் கையில் அணியும் தொடி என்ற அணிகலனாகும். காலில் அணியும் வீரக்கழலாகும். ஒப்பற்ற தோள்வளையலாகும். இடையில் அணியும் அரைஞாண் ஆகும்; காதுகளில் அணியும் குழையாகும். ஏனைய அணிகளாகும்; அணியும் மாலையும் ஆகும்.
இப்பாடலில், அரவு எனப்படும் உயிர்ச் சாதிகளில் ஒன்றான பெயர் இடையில் வந்து முதலிலிருந்து இறுதிகாறும் பல இடங்களிலும் இயைந்து பொருள் தருமாறு காண்க.]
பொருள் இடைநிலைத் தீவகம் வருமாறு:
"மான்அமருங் கண்ணாள் மணிவயிற்றில் வந்துஉதித்தான்,
தானவரை என்றும் தலைஅழித்தான்,-யானைமுகன்
ஓட்டினான் வெங்கலியை, உள்ளத்து இனிதுஅமர்ந்
வீட்டினான் நம்மேல் வினை"
என வரும்.
[விநாயகன் மான் போன்ற கண்களை உடைய பார்வதியின் அழகிய வயிற்றில் வந்து தோன்றினான். எப்பொழுதும் அசுரர்களுடைய தலையை அழித்தான். கொடிய வறுமையைப் போக்கினான். நம் உள்ளத்தில் மகிழ்வோடு தங்கி நம் வினைகளைப் போக்கினான்.
இப்பாடலில், யானைமுகன் என்ற பொருட்பெயர் இடையில் அமைந்து பாடலின் பல இடங்களிலும் சென்று இயைந்து பொருள்படுமாறு காண்க.]
தொழில் கடைநிலைத் தீவகம் வருமாறு:
"துறவுஉளவாச் சான்றோர் இளிவரவும், தூய
பிறஉளவா ஊன்அளாய் ஊணும், - ப றைகறங்கக்
கொண்டான் இருப்பக் கொடுங்குழையாள் தெய்வமும், ஒன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று"
|
|
|