194

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     மேலதற்கு ஓர் ஒழிபு

 647. மாலை விருத்தம் ஒருபொருள் சிலேடை
      உவமைஉரு வகத்தோடும் ஒன்றுமார் அதுவே.

 இது மேலதற்கு ஓர்ஒழிபு கூறுகின்றது.

      இ-ள் :   மாலை முதல்உருவகம் ஈறாகக் கிடந்த ஆறனோடும் பொருந்தும்
 மேற்கூறிய தீவக அலங்காரம் என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

    ["அதுவே,
     மாலை விருத்தம் ஒருபொருள் சிலேடைஎன
     நாற்வகை யானும் நடைபெறும் என்ப."                     - தண்டி. 41 

    "அதுவே,
     ஒருபொருள் உவமை உடனுறல் சிலேடை
     விருத்தம் மாலைஎன்று இவற்றொடும் விரவும்."               - மா. 161] 

 மாலாதீவகம் வருமாறு:

    "மனைக்கு விளக்கம் மடவாள், மடவாள்
     தனக்குத் தகைசால் புதல்வர், - மனக்குஇனிய
     காதல் புதல்வர்க்குக் கல்வியே, கல்விதனக்கு
     ஓதில் புகழ்சால் உணர்வு"

 என வரும்.

     [வீட்டிற்கு இளம்பெண் விளக்கமாவாள்; மடவாளுக்குப் பண்பு நலன்சான்ற
 புதல்வர் விளக்கமாவர்; மனத்துக்கு அனிய அன்பு செலுத்தத்தக்க புதல்வருக்குக்
 கல்வியே பிளக்கமாகும்: கல்விக்கு உணர்ந்து வாழ்க்கையில் கடைப்பிடித்தல்
 விளக்கமாகும்.