அணியியல் - தீவக அணி

195 

     இப்பாடலில், விளக்கம் என்ற சொல் ஒன்றோடொன்று தொடர்புடைய மடவாள்,
 புதல்வர், கல்வி, உணர்வு என்ற சொற்களொடும் தனித்தனி இடைந்து பொருள் தந்தது
 காண்க. மாலையிலுள்ள மலர்கள் ஒன்றோடொன்று தொடர்புறுவது போல இப்பாடற்
 செய்திகள் பலவும் ஒன்றோடொன்று தொடர்புள்ளமை காண்க.

    "தீவகத் தொடுமுன் செப்பிய ஏகா
     வளிதனைச் சார்த்தல் மாலை விளக்கே."                        -ச. 74 

    "காட்டிய ஒற்றை மணிமா லையைவிளக் கைப்பொருத்தி
     நாட்டுதல் மாலை விளக்கமாம்."                            - குவ. 48] 

 விருத்தாதீவகம் வருமாறு:

    "வரிவண்டுநாணா, மதுமலர் அம்பா,
     பொருவெஞ் சிலைக்குப் பொலியும், - பிரிவின்
     விளர்க்கும் நிறம்உடையார் தம்மேல் மெலிவும்,
     வளர்க்கும்; மலையா நிலம்"

 என வரும். ஒருபொருள் இரண்டுகுணம் செய்தமையின் அப்பெயர்த்து ஆயிற்று.

     [மலைய மலையிலிருந்து வரும் தென்றல்காற்று, வண்டினையே நாணாகவும்
 மலர்களையே அம்பாகவும் கொண்டு மன்மதன் போரிடும் கரும்பு வில்லுக்குப்
 பொலிவை வளர்க்கும ; பிரிவினால் பசலை பாய்ந்து வருந்தும் தலைவியர்மாட்டு
 மெலிவை வளர்க்கும்.

     மலையாநிலம் என்ற சொல் இச் செய்யுளில் ஈரிடத்தும் இயைந்து, பொலிவை
 வளர்க்கும், மெலிவை வளர்க்கும் என ஒன்றற்குஒன்று விருத்தமாகிய இரு
 கருத்துக்களை விளக்கியவாறு காண்க. (விருத்தம்-மாறுபாடு)]

     ஒருபொருள் தீவகம் வருமாறு:

    "வியன்ஞாலம் சூழ்திசைகள் எல்லாம் விழுங்கும்,
     அயலாத் துணைநீத்து அகன்றார் - உயிர்பருகும்,