நாம் இல்லத்தில் விடுத்துப் பொருள் தேடப் பிரிந்தமையானே நம்மைப் பிரிந்திருக்கும் தலைவி விழிகள் மானின் மருட்சியைப் பெற்றுச் செவ்வரி கருவரி படர்ந்து கா.ணும்போது நம் உள்ளம் மயங்கிப் பிரிதலுக்கு வருந்துமாறு நீண்டுள்ளன - என்பது சிலேடைப் பொருள்.]
உவமான தீவகம் வருமாறு:
"முன்னம் குடைபோல், முடிநா யகமணிபோல்,
மன்னும் திலகம்போல், வாள்இரவி - பொன்அகலம்
தங்கு கவுத்துவம்போல், உந்தித் தடமலர்போல்,
அங்கண் உலகுஅளந்தார்க்கு ஆம்"
என வரும்.
[சூரியன், தான் நீண்டு உயர்ந்த வடிவெடுத்த திருமாலுக்கு முதலில் குடைபோல ஆகும்; பின் தலையிலுள்ள கிரீடத்தின் சிறந்த மணிபோல ஆகும்; பின் நெற்றியில் அணியும் திலகம் போல ஆகும்; அடுத்து மார்பில் அணிந்துள்ள கவுத்துவ மணி போல ஆகும்; இறுதியில் கொப்பூழிலிருந்து தோன்றிய தாமரைப் பூப்போல ஆகும்.
இப்பாடலில், உவமை என்ற அணி வந்துள்ளது. அதனோடு இடையிலுள்ள இரவு என்னும் சொல் துடை, மணி, திலகம், கவுத்துவம், உந்தித்தடமலர் என்ற பலவற்றோடும் தனித்தளி இயைந்து பொருள் தந்தவாறு காண்க.]
உருவக தீவகம் வருமாறு:
"கானல் கயலாம், வயலில் கமலமாம்,
ஏனல் கருவிளையாம், இன்புறவில் மானாம்
கடத்துமேல் வேடர் கடுஞ்சரமாம், நீங்கிக்
கடத்துமேல், மெல்லியலாள் கண்"
என வரும். பிறவும் அன்ன. "நீங்கிபக்கடத்துமேல்" என்பதற்கு "நெஞ்சமே! இவளைத் தனியே இருத்திப் பிரிந்து விட்டுப் போவோமாயின்" எனப் பொருள் உதைத்துக் கொள்க. (28) |
|
|