198

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

      [பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன், தலைவியின் பிரிவை நினைத்துப்
 "பிரிந்து செல்வோமாயின் தலைவியின் கண்கள் நெய்தல் நிலத்தில் கயலாகவும், மருத
 நிலத்தில் தாமரையாகவும், குறிஞ்சி நிலத்தில் தினைப் புனத்தின் இடையில் தோன்றும்
 கருவிளையாகவும், காடாகிய முல்லை நிலத்தில் மானாகவும், பாலை நிலத்தில்
 வேடர்கள் கைக்கொள்ளும் அம்பாகவும் காட்சி வழங்கும் ஆதலின் இவளைப் பிரிந்து
 சேறல் எனக்கு இயலாது" என்ற இப்பாடலில், கண் என்ற சொல் கயலாம் முதலிய பல
 உருவகச் சொற்களோடும் தனித்தனியே இயைந்து பொருள் தந்தவாறு காண்க.]

பின்வரும் நிலையணி - இலக்கணம்

 648. முன்வரு சொல்லும் பொருளும் பலவயின்
      பின்னும் வரும்எனின் பின்வரு நிலையே.

     இது நிறுத்தமுறையானே பின்வருநிலை என்னும் அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் : ஒரு செய்யுளுள் முன்னர் வந்த சொல்லே பின்னர்ப் பலஇடத்து வரினும்,
 முன்னர் வந்த பொருளே பின்னர் பல இடத்து வரினும் அது பின்வருநிலை என்னும்
 அலங்காரமாம் என்றவாறு.

     [இதனைச் சந்திராலோகமும் குவயானந்தமும் பின்வரு விளக்கணி என்று
 குறிப்பிடும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுவதும் தண்டி - 42

    "நெறிப்ப்டு செய்யுள்முன் நிலைபெறு சொற்பொருள்
     மறித்துறு பலபுடை வரின்பின் வருநிலை."                    - மா. 157