"அதுவே,
சொற்பின் வருநிலை பொருட்பின் வருநிலை
சொற்பொருட் பின்வரு நிலைஎன மூன்றாம்." - மா. 158
"உவமா னபபொருட் பின்வரு நிலையும்
தவலருஞ் சிறப்பின் தான்வரல உளதே." - மா. 159
"பின்வரு நிலையே பிறழ்ந்தெனப் பலவயின்
முன்வரும் சொலபொருள் பின்னும் வருவதே." -தொ. வி. 350
"பொழியப் பட்ட பாமுற் போந்த
பெயரே பின்னும் பெயர்ந்து வரவது
பின்வரு நிலையெனப் பேசப் படுமே." -மு. வீ. பொ. 62
"சொல்லும் பொருளும் சொல்லொடு பொருளும்
வாக்கியப் பின்னரும் வருவது பின்வரு
விளக்கது மூன்றா விரியும் என்ப." - ச.38
"முன்னமார் விளக்கணி மேவு தரும முடிவதனித
தனியே வரின்பின் வருவிளக் காம்அது தானுஞ்சொலால்
கனிவா கியபொரு ளால்அவ் விரலண்டுங் கதுவலால்
இனிமூன்று எனவரும்." - குவ. 38]
சொல் பின்வருநிலை அணி வருமாறு;
"மால்கரி காத்துஅளித்த மாலுடைய மாலைசூழ்
மால்வரைத்தோள் ஆதரித்த மாலையார், - மால்இருள்சூழ்
மாலையின், மால்கடல் ஆர்ப்ப, மதன்தொடுக்கும்,
மாலையின் வாளி மலர்"
என வரும். மால் - மயக்கம், அரி, பெருமை, கருமை, மாலை - தொடையல், இயல்பு, அந்தி, இடையறாமை.
[மத மயக்கம் பொருந்திய யானையைக் காத்தளித்த திருமாலுடைய மாலை சூழ்ந்த பெரிய மலை போன்ற தோள்களை விரும்பிய இயல்பிளை உடையவர்மேல், கரிய இருள் சூழ்ந்த மாலை நேரத்தில் பெரிய கடல் ஆரவாரம் செய்ய மன்மதன்
|
|
|