200

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 பூமாலையிலுள்ள மலர்களாகிய அம்புகளைத் தொடுப்பான் - என்ற இப்பாடலில்,
 மால், மாலை என்ற சொற்கள் பலவிடத்தும் பலபொருளில்வந்தவாறு காண்க.]

     பொருள் பின்வருநிலைஅணி வருமாறு;

    "அவிழ்ந்தன தோன்றி, அலர்ந்தன காயா,
     நெகிழ்ந்தன நேர்முகை முல்லை, - மகிழ்ந்துடன்
     விண்டன கொன்றை, விரிந்த கருவிளை,
     கொண்டன காந்தள் குலை"

 என வரும். இது பொருள் பின்வருநிலை; என்னை? இவ்வனைத்தும் மலர்தல்
 பொருள் ஆகலின்.

     [தோன்றி மலர்கள் பூத்தன; காயாம்பூக்கள் மலர்ந்தன; முல்லையின் போதுகள்
 அலர்ந்தன; கொன்றைகள் மகிழ்வோடு இதழ் விரிந்தன; கருவிளைப் பூக்கள்
 விரிந்தன; காந்தள் குலைகளை எடுத்தன - என்ற இப்பாடலில்,

     அவிழ்ந்தன, அவர்ந்தன, முகை நெகிழ்ந்தன, இதழ் விண்டன, விர்ந்த, குலை
 கொண்டன - என்ற சொற்கள் யாவும் பூத்தன என்ற ஒரே பொருளைக்
 குறிக்க வந்துள்ளமை காண்க.]

     வது என்னாது "வரும் எனின்" என்ற மிகையானே முன்னர் வந்த சொல்லும்
 பொருளும் பின்னர்ப் பலவயின் ஒருங்கு வருமாயின், அது சொற்பொருட்பின்
 வருநிலை அணி என்ப் பெயர் பெருதலும் கொள்க.

     வரலாறு:

    "வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுஉணரார்,
     வைகலும் வைகலை வைகும்என்று அன்புறுவார்,
     வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்,
     வைகலை, வைத்துணரா தார்"

 என வரும்,