அணியியல் - முன்னவிலக்கு அணி

203 

     "கூர்பொருள் காரணம் காரியம் குணமெனும்
     ஈரிரண் டினும்புணர் இயற்கைய தாகும்."

- மா, 221 

     "முன்ன விலக்கேல் முன்னத்தின் மறுத்தலே."

- தொ. வி. 351 

     "கோதறும் ஒருபொருள் குறப்பில் தடுப்பது
     முன்ன விலக்கென மொழியப் படுமே."

- மு. வீ. பொ. 63 

     "வெளிப்படை யாகி மேவிய கருத்தொடு
     பொருந்து நீக்கம் புகல்வது விலக்கே."

- ச. 124 

     "பிரசித்த மான மறுப்பினை யோர்கருத் தேபிறங்கி
     வரவைத்த லின்பேர் விலக்கணி."

- கு. . அ. 98] 

     இறந்தவினை விலக்கு வருமாறு:


     பாலன் தனதுஉருவாய், ஏழ்உலகுஉண்டு, ஆலிலையின்
     மேல்அன்று நீதுயின்றாய், மெய்என்பர்; - ஆல்அன்று
     வேலைசூழ் நீரதோ? விண்ணதோ? மண்ணதோ?
     சோலைசூழ் குன்றுஎடுத்தாய்! சொல்

 என வரும்.

     [கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த திருமாலே !
 நீ ஊழிக்காலத்தில் ஏழு உலகத்தையும் உன் வயிற்றுள் அடககிக் குழந்தை
 வடிவாய் ஆலிலேயில் துயின்றாய் என்று கூறப்படும் கூற்று உண்மை என்று
 சான்றோர் கூறுவர். நீ தங்கியிருந்த ஆலிலேயானது கடலிலுள்ளே இருந்ததோ?
 விண்ணுலகில் இருந்ததோ? சொல்லுவாயாக.

     இறைவனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் நம்மனோர்
 பௌதிகமாகிய அறிவுநிலைக்கு எட்டாது ஆதலின், அஃது ஆராயப்படாது
 என்று ஆராய்ச்சியை விலக்கியவாறு காண்க. இஃது இறந்தகாலத்து நிகழ்ச்சியாதலும்
 காண்க.

 மாறன் அலங்கார எடுத்துக்காட்டும் இவ்விளக்கத்தையே உட்கொண்டிருக்கிறது.

- மாறன் 220]