அணியியல் - முன்னவிலக்கு அணி

205 

     என்ற இப்பாடலில், எதிர்காலத்தில் நிகழக் கூடிய செயல்களைக் கூறித்
 தலைவன் செலவைத் தோழி விலக்கியவாறு காண்க.]

     பொருள் விலக்கு வருமாறு:

     "கண்ணும் மனனும் கவர்ந்தவள் ஆடுஇடம் என்று,
     அண்ணல் அருளும் அடையாளம், - தண்நிழலின்
     சுற்றுஎல்லை கொண்டுஉலவும் சோதித் திரள்அல்லால்,
     மற்றுஇல்லை காணும் வடிவு"

 என வரும். "அடையாளத் தண்ணிழல்" அடையாளந் தண்ணிழல் என மெலிந்து
 நின்றது.

     [தன் கண்களையும் மனத்தையும் கவர்ந்த தலைவி விளையாடும் இடம் என்று
 தலைவன் குறிப்பிட்ட அடையாளப்படி குளிர்ந்த நிழலை உடைய சூழலிடத்தைக்
 கைக்கொண்டு உலவித் திரியும் ஒரு பேரொளி வடிவமே காணப்படுகின்றதே அன்றி
 உறுப்பு வடிவம் ஒன்றும் காணப்படுவதாயில்லை - என்று தலைவன் கூறிய குறியிடம்
 சென்று தலைவியைக் கண்ணுற்ற பாங்கன் வியந்து கூறிய இப்பாடலில், ஒளியே
 அன்றி உருவமே புலப்பட்டிலது என்று பொருள் விலககப்பட்டவாறு.]

     குண விலக்கு வருமாறு:

     "மாதர் துவர் இதழ்வாய் வந்துஎன் உயிர்வரும்;
     சீத முறுவல் செயல்அழிக்கும்; - மீதுஉலவி
     நீண்ட மதர்விழிஎன் நெஞ்சம் கிழித்துஉலவும்;
     யாண்டையதோ மென்மை இவர்க்கு?"

 என வரும்.

     [இப்பெண்ணின் சிவந்த இதழ்களை உடைய வாய் என் உயிரைக் கவர்கிறது;
 குளிர்ந்த புன்முறுவல் என்ன ஆற்றலை அழிக்கின்றது; காதளவும் உலவி நீண்ட
 இவள் செழித்த விழிகள் என் உள்ளத்தைக் கிழித்து உலவுகின்றன. மெல்லியலாள்
 என்ற பெயருக்கு ஏற்ப இவளிடத்து மென்மை எங்குக் காணப்