வரும் அளவும் ஆற்றியிருக்க ஒருப்பட்டு என் உடலில் தங்கியுள்ளது. இதற்கிடையில் மயில் அகவி ஆடுதலையும், கொன்றை பொன்போல் மலர்வதனையும், முல்லை பூத்தலையும், மின்னலை மேகங்கள் வெளிப்படுத்துதலையும் உண்மையில் கார் காலத்து நிகழ்ச்சிகள் என்று யாங்கனம் கொள்ளுவோம்? - என்ற பாடலில், கார்காலம் வந்துவிட்டால், தலைவன் அககாலத்து வரவில்லை எனின் உயிர் நீக்குதலாகிய காரியம் நிகழ்ந்திருக்கும்; கார்காலம் வாராமையின் உயிர் நீக்குதலாகிய காரியம் நிகழவில்லை என்று தலைவி காரியத்தை விலக்கியவாறு காண்க.]
முன்ன விலக்கு விரி
650. வன்சொல் வாழ்த்துத் தலைமை இகழ்ச்சி
துணைசெயல் முயற்சி பரவசம் உபாயம்
கையறல் உடன்படல் வெகுளி விலக்கல்
ஐயம் என்ற அவைபதின் மூன்றொடும்
வேற்றுப்பொருள் சிலேடை ஏதுவும் உளப்பட
மேற்கூ றியஅதன் விரிஈ ரெட்டே.
இஃது அதன் விரி இத்துணைத்து என்கின்றது
இ-ள் : வன்சொல் சொல்லி விலக்குவதூஉம், வாழ்த்தி வைத்து விலக்குவதூஉம், வாழ்த்தி வைத்து விலக்குவதூஉம், தன்பால் தலைமை தோன்றக் கூறி விலக்குவதூஉம், விலக்குவதற்கு ஏதுவை இகழ்ந்து விலக்குவதூஉம், துணைசெய்வாரைப் போலக்கூறி விலக்குவதூஉம், முயற்சி தேமான்றக்கூறி விலக்குவதூஉம், தன்வசம் அல்லாமை தோன்றக்கூறி விலக்குவதூஉம், ஓர் உபாயம் காரணமாகக்கூறி விலக்குவதூஉம், வேண்டிய பொருள்மேல் முயலும் ஒழுக்கம் இன்மை தோன்றக்கூறி விலக்குவதூஉம், உடன் பட்டார்போல் விலக்குவதூஉம், வெகுளி தோன்றக் கூறி |
|
|