208

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 விலக்குவதூஉம், இரங்கல் தோன்றக்கூறி விலக்குவதூஉம் ஐயுற்றதனை விலக்குவதூஉம்
 என்று சொல்லப் பட்ட பதின்மூன்றோடும், வேற்றுப்பொருள் விலக்கும் சிலேடை
 விலக்கும் ஏதுவிலக்கும் ஆகிய மூவகை விலக்கும் உளப்பட முற்கூறிய முன்னவிலக்கு
 என்னும் அலங்காரத்தின் விரி பதினாறாம் என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 45, 46

     ["ஆசி அனாதரம் காரணம் காரியம் ஐயமேது
     பேசும் உபாயம் சிலேடை முயற்சி பிறபொருள்வைப்பு
     ஏசில் கருணை நட்போடும் கருமம் இகழ்ச்சி வன்சொல்
     தேசின் இரக்கம் தலைமை அனுசயம் செற்றமென்னே."

     "வெப்பம் தருமம் பரவசத் தோடு வியன்குணமற்று
     ஒப்புப் பொருளின் தடைமொழி தன்னை உய்த்துணர்ந்து
     செப்ப முடையவர் காலங்கள் மூன்றில் திருத்திப்பின்னும்
     எப்பண்பு கொண்ட விகற்பம் வரினும் இயற்றுவரே."

     "கடுஞ்சொல் ஆசி தலைமை இகழ்ச்சி
     உடன்படல் முயற்சி துணைசெயர்ல உபாயம்
     ஐம் பரவசம் வெகுளி இரங்கல்
     கையறல் உடன்விரி காட்சியும் உளவே,"

     "அவற்றுள்,
     கடுஞ்சொல்லின் விலக்குதல் கடுஞ்சொல் விலக்கே,"

     "ஒழிந்தவும் தம்பெயர் உரையிற் கொள்ளும்.,"

     "வேற்றுப்பொருய்ள வைப்பே ஏதுஎன்று இன்னவை
     மேல்தொடர்ந்து இயலும் விதியும் இதற்குள்."