அணியியல் - முன்னவிலக்கு அணி

209 

     வன்சொல் விலக்கு வருமாறு:

     "மெய்யே பொருள்மேல் பிரிதியேல் வேறுஒரு
     தையலை நாடத் தகும்நினக்கு; - நெய்இலைவேல்
     வள்ளல்! பிரிவுஅற்றல் பார்த்து, எங்கள் வாழ்நாளைக்
     கொள்ள உழலும் கூற்று"

 என வரும். வள்ளல் - அண்மைவிளி.

     [நெய் பூசப்பட்ட இலை போன்ற வடிவத்தை உடைய வேலை ஏந்திய தலைவனே!
 உண்மையிலேயே நீ தலைவியை நீத்துப் பொருள்வயின் செல்லும் பிரிவை
 உட்கொள்வாயானால், பிறள் ஒருத்தியை மறுமணம் செய்துகொள்ள வேண்டியநிலை
 நினக்கு ஏற்படும். நீ பிரியும் காலத்தை எதிர்நோக்கி எம் உயிரைக் கவர்ந்து
 கொளளக் கூற்றம் சுழன்று கொண்டிருக்கிறது என்ற தோழி கூற்றில்,

     "நீ பிரியின் தலைவி இறந்துவிடுவாள் ஆதலின் மீண்டுவந்த பின் நீ மறுமணம்
 செய்து கொள்ளும் நிலை ஏற்படும்" என்று கொடுஞ்சொற் கூறிச் செலவை
 விலக்கியவாறு காண்க.]

     வாழ்த்து விலக்கு வருமாறு:

     "செல்லும் நெறிஅனைத்தும் சேம நெறியாக;
     மல்க நிதியம்; வளம்சுரக்க; - வெல்லும்
     அடல்தேர் விடலை! அகன்றுஉறைவது யாங்கு, அவ்
     இடத்தே பிறக்கவே யாம்"

 என வரும். அகன்று உறைவது எவ்விடத்தே, சொலல்வேண்டும்; யாங்கள்
 அவ்விடத்தே பிறப்பேமாக என்றாள்; இறக்குங்காலத்து உண்டாகிய நினைவு பிறந்த
 காலத்துக்கூடும் என்பதை நோக்கி.

     [வெல்லும் ஆற்றலையும் தேரினையும் உடைய வீரனே! நீ போகும் வழிகள்
 அனைத்தும் பாதுகாவலை உடைய வழிகள் ஆகுக; செல்வம் பெருகுக;
 வளம் சுரந்திடுக; நீ எங்களைப் பிரிந்து எவ்விடத்துக்குச செல்கின்றாயோ
 அவ்விடத்தில் யாம் வந்து பிறத்தலை விரும்புகிறோம் - என்ற தோழி கூற்றில்,