அணியியல் - முன்னவிலக்கு அணி

213 

 ஆற்றுவிக்கும் திறத்தை யான் அறியேன். நீயே, இவள் உன்மேல் வைத்திருக்கும்
 பற்றினை நீக்கச் செய்து, பின் பொருள்வயின் பிரிந்து செல்வாயாக-

     என்ற தோழி கூற்றில், தலைவியை ஆற்றுவிக்கும் ஆற்றல் தன் இயல்புக்கு
 அப்பாற்பட்டது என்று அவள் கூறித் தலைவன் பிரிவை விலக்கியவாறு காண்க.

     பரவசம் - தன்வசம் அன்மை.]

     உபாயவிலக்கு வருமாறு.

    "இன்உயிர் காத்துஅணிப்பாய் நீயே; இளவேனில்
     மன்னவனும் கூற்றுவனும் வந்துஅணைந்தால், - அன்னோர்
     தமக்கு, எம்மைத் தோன்றாத் தகைமையதுஓர் விஞ்சை,
     எமக்குஇன்று அருள்புரிந்தே ஏகு"

 என வரும்.

     [தலைவனே! நீயே எங்கள் இனிய உயிரைப் பாதுகாத்து நிலைபெறச் செய்யும்
 பொறுப்பினை உடையை. ஆதலின் நீ பொருள்வயின் பிரியக்கருதின்,
 எங்கள் உயிரைக் கோடற்கு மன்மதனும் எமனும் வந்து சேர்ந்தால், அவர்களுக்கு
 எம் உயிர் புலனாகாதபடி மறைத்துக் கொள்ளும் வித்தையை எங்களுக்குக்
 கற்பித்துப் பின் பிரிவாயாக -

     என்ற தோழி கூற்றில், தலைவன் பிரிவிற்கு உபாயம் கூறுவாள் போலப் பிரிவை
 விலக்கியவாறு காண்க.

     உபாயம் - மன்மதனுக்கும் எமனுக்கும் புலனாகாதபடி தம் உயிரைக்கரந்து
 கொள்ளற்காம் வித்தை.]

     கையறள்விலக்கு வருமாறு:

    "வாய்த்த பொருள்விளைத்தது ஒன்றுஇல்லை; மாதவமே
     ஆர்த்த அறிவுஇல்லை; அம்பலத்துக் - கூத்துஉடையான்
     சீலம் சிறிதேயும் சிந்தியேன், சென்றுஒழிந்தேன்;
     காலம் வறிதே கழித்து"

 என வரும்.