என
வரும்.
[‘சோலையினிடத்து விளையாடும் இவ்வுருவம் மின்னலோ? அல்லால் பொன்
போன்ற தேமலை உடைய பொற்கொடியோ? யாதாகும்? எண்டிசையும் உலாவும்
கண்களையும் திரண்ட
முலைகளையும் தோள்களையும் மேலே இருண்ட கூந்தலையும்
மின்னல் தாங்கி இருக்குமோ?’-
என்று தலைவன் கூட்டிய இயல் இடங்கண்டு வியந்த பாங்கன் கூற்றில், மின்னோ
பொற்கொடியோ என்ற ஐயம் கண், முலை, தோள், கூந்தல் என்பனவற்றால்
விலக்கப்பட்டவாறு.]
[வேற்றுப்பொருள்விலக்கு
வருமாறு:
‘தண்கவிகை யால்உலகம் தாங்கும் சயதுங்கன்
வெண்கவிகைக் குள்அடங்கா வேந்துஇல்லை - உண்டோ
மதியத் துடன்இரவி வந்துஉலவு வானில்,
பொதியப் படாத பொருள்?’
என
வரும்.
[குளிர்ந்த
வெண் கொற்றக்குடையின் நிழலால் உலகத்தை நலிவிலிருந்து
பாதுகாக்கும் சோழ மன்னனுடைய
வெண்குடைக்குள் அடங்காத அரசே இல்லை.
சந்திரனும் சூரியனும் உலவும் வானத்தின்கண்
அடக்கப்படாத பொருள் எதுவும் இல்லை.
‘மதியத்துடன்...பொருள்’ என்ற பொதுப் பொருளைக் கொண்டு
‘தண்கவிகை...இல்லை’ என்ற சிறப்புப் பொருளை