அணியியல் - முன்னவிலக்கு அணி

217 

 விளக்கியதால் வேற்றுப்பொருள் வைப்பணியும், வானில் பொதியப் படாத
 பொருள்இல்லை, சயதுங்கன் கவிகைக்குள் அடங்கா வேந்தில்லை என்ற
 விலக்கணியும் அமைதலின் இது வேற்றுப் பொருள் விலக்கணி ஆயினவாறு.]

     சிலேடைவிலக்கு வருமாறு:

    "அரும்போருகம் செற்று, அமுத மயம்ஆகி,
     வம்புஆர் முறுவல் ஒளிவர்க்க, - இம்பர்
     முகைமதுவார் கோதை முகம்உண்டு; உலகின்
     மிகைமதியும் வேண்டுமோ வேறு?"

     என வரும்.

     [இப்பாடல் கோதை முகத்திற்கும் மதிக்கும் சிலேடை. தலைவி முகம் வனப்பால்
 தாமரையை வென்று, தலைவற்குத் தண்ணனி செய்தலால் அமுதவடிவனதாய்,
 புது அழகு தோன்றும் புன்முறுவலால் ஒளியை வளர்க்கின்றது; மதியம்
 தாமரையைக் கூம்பச்செய்து, பின் அமுதவடிவாய்ப் புது அழகுதரும் ஒளியைப்
 பரப்புகின்றது.

     முகம் என்ற பொருள் இருப்பவும், அதனை ஒத்த பண்பும் செயலும் உடைய
 மதியம் உலகிற்கு மிகை என்று கூறி, மதியத்தை விலக்குதலின் விலக்கு.

     இவ்வாறு சிலேடை சிலக்கு வந்தமை காண்க.]

     ஏதுவிலக்கு வருமாறு:

    "பூதலத்துள் எல்லாப் பொருளும் வவறியராய்க்
     காதலித்தார் தாமே கவர்தலான், - நீதி
     அடுத்துஉயர்ந்த கீர்த்தி அநபாயா! "யார்க்கும்
     கொடுத்தி"எனக் கொள்கின் றிலம்"

 என வரும். பிறவும் அன்ன.