அணியியல் - வேற்றுப்பொருள் வைப்பணி

219 

     இ-ள் :   முன் ஒரு பொருள்திறம் தொடங்கிப் பின்னர் அதனை முடிப்பதற்கு
 ஆற்றலுடைய பிறிது ஒரு பொருளை உலகு அறியும் இயல்பான் ஏறிட்டுவைத்து
 மொழிவது வேற்றுப்பொருள்வைப்பு என்னும் அலங்காரமாம். அவ்வேற்றுப்பொருள்
 வைப்பு, ஒரு திறம் உரைத்தால் அத்திறம் எல்லாவற்றின் மேலும் முற்றச்செல்ல
 வைத்தலும், அவ்வாறு அன்றிச் சிலவற்றின்மேல் செல்லவைத்தலும், தம்முள்
 மாறுபட்டுத் தோன்ற வைத்தலும், முன்னர்வைத்த பொருளையும், பின்னரதனையும்
 ஒருசொல் தொடர்பான் முடிய வைத்தலும், கூடாத இயல்பைக் கூடுவதாக வைத்தலும்,
 கூடும் இயல்பைக் கூடுவதாக வைத்தலும், கூடாத இயல்பையும் கூடு் இயல்பையும்
 கூடுவதாக ஒருங்கு வைத்தலும், நல்வினைப் பயன் தீதாகவும் தீவினைப்பயன்
 நன்றாகவும் வைத்தலும் என்று சொல்லப்பட்ட இத் தன்மையவாகிய எண்வகைத்
 திறத்தினை உயையதாம் என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 47, 48

    "தேரும் பொதுவே சிறப்பு நிலையே சிலேடையன்றி
     ஏரும் முரணியை போடிரய பின்மை இயைபுதம்மில்
     பேரும் விரவிய லேநற் பிறபொருள் வைப்புத்தண்டி
     சீரும் பொலிவும் மலியும் தன்னூலினிற் செப்பியதே".           - வீ. 162 

    "ஒருபொரு ளினைமுதல்ல உரைத்ததை முடித்துத்
     தருபொருள் நிலைபினும் தான்வைப் பதுவே
     புகழ்புணர் வேற்றுப் பொருள்வைப் பாகும்."                  - மா. 207 

    "அனைத்தினும் சேறல் ஒருவகை அடைதல்
     முரணுற மொழிதல் இரட்டுற மொழிதல்
     கூடுதல் கூடா வகையின்கூறுதல்
     இருமையின் விளம்பல் விபரீதத்து இயம்பல்என்று
     எண்வகை யான்வரும் இயலுடைத்து அதுவே                  - மா. 208