"வேற்றுப்பொருள் வைப்பே விளங்கினது தொடங்கி
ஈற்றின் உதவிய ஏற்றி உரைத்தலே." - தொ, வி. 342
"ஆதியில் ஒருபொருள் ஆரம் பித்தது
முடித்தற்குப்பின்ஒருசொல் மொழிவது
வேற்றுப்பொருள்வைப் பாமென மொழிய." - மு,வீ.பொ. 64
"மாறு படும்பொருள் வைத்து முடிப்பது
முரணிற் றோன்றலாம் மொழியுங்காலே." - மு,வீ.பொ. 65
"பொருந்தாப் பொருளைப் பொருந்த வைப்பது
பொருந்தாப் பிறபொருள் வைப்பெனப் படுமே.." - மு,வீ.பொ. 66
"கூடும் பொருளைக் கூட்டி உரைப்பது
கூடும் இயற்கையாம் குறிக்கும் காலே." - மு,வீ.பொ. 67
"இருமையும் இயைவன இருமை இயற்கை." - மு,வீ.பொ. 68
"பொதுவால் சிறப்பும் சிறப்பால் பொதுவும்
புகறல் வேற்றுப் பொருள்வைப் பணியே." - ச. 87
"பொதுவால் சிறப்பைச் சிறப்பால் பொவினைப் பூரித்திடல்
அதின்நாமம் ஓர்ந்திடில் வேற்றுப் பொருள்வைப்பணி" -குவ. 61
முழுதும் சேறல் வருமாறு :
"புறந்தந்து இருள்இரியப் பொன்நேமி உய்த்துச்
சிறந்த ஒளிவளர்க்கும் தேரோன் - மறைந்தான்;
புறஆழி சூழ்ந்த புவனத்தே தோன்றி
இறவாது வாழ்கின்றார் யார்?"
என வரும்
[இருளைப் புறங்காட்டி ஓடச்செய்து அழகிய சக்கரத்தைச் செலுத்திச் சிறந்த ஒளியைப் பரப்பும் கதிரவன் மறைந்தான். புறத்தே கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் இறவாது என்றும் நிலைத்திருப்பவர் யாவர்? - என்ற இப்பாடலில், "புறவாழி .... யார்" என்பது பொதுப் பொருள்; "புறந்தது.... மறைந்தான்" - என்பது சிறப்புப் பொருள். பொதுப்பொருளால் சிறப்புப்பொருள் விளக்கப் பட்டவாறு, பிறந்தவர் இறத்தல் உலகம் முழுதிற்கும் பொதுப் பண்பு ஆதலின், இது முழுதும் சேறல் ஆயிற்று. |
|
|