அணியியல் - வேற்றுப்பொருள் வைப்பணி

221 

     முழுவதும் சேறல் - சொல்லப்படும் ஒரு பொதுச் செய்தி உலகிலுள்ள எல்லாப்
 பொருள்களுக்கும் குறைவறப் பொருந்தும் பொதுச் செய்தியாக அமைதல்.]

     ஒருவச்சேறல் வருமாறு:

    "எண்ணும் பயன்தூக்காது, யார்க்கும் வரையாது,
     மண்உலகில் வாமன் அருள்வளர்க்கும்; - தண்நறுந்தேன்
     பூத்துஅளிக்கும் தாரோய்! புகழாளர்க்கு, எவ்வுயிரும்
     காத்துஅளிக்கை அன்றோ கடன்?"

 என வரும்.

     [குளிர்ந்த நறிய தேனை மலர்ந்து கொடுக்கும் மாலையை அணிந்தவனே!
 கைம்மாறு கருதாமல், "அருள் செய்யத்தக்கவர் இவரே" என்று சிலரை
 வரையறுதத்துக்கொள்ளாமல், இவ்வுலகில் திருமால் கருணையை வளர்க்கின்றான்.
 உண்மையான புகழை உடையவருக்கு எல்லா உயிர்களையும் பாதுகாத்துக் கருணை
 செய்வதன்றோ கடமையாகும்? -

   இப்பாடலில், "புகழாளர்க்கு........கடன்"- பொதுச் செய்தி; "எண்ணும் ........வளர்க்கும்" -
 சிறப்புச்செய்தி. பொதுச் செய்தியால் சிறப்புச் செய்தி விளக்கப்பட்டவாறு.

     இச்செய்தி உலகத்து உயிர்கள் அனைத்திற்கும் செல்லாது, புகழாளர் ஆகிய
 ஒரு கூற்றிற்கே சேறலின் ஒருவழிச் சேறல். ஒருவழிச் சேறல் - சொல்லப்படும்

     ஒரு பொதுச் செய்தி உலகத்துப் பொருள் அனைத்திற்கும் உரியதாகாது, ஒரு
 கூற்றிற்கே உரியதாக அமைவது.]முரணித்தோன்றல் வருமாறு:

    "வெய்ய குரல்தோன்றி, வெஞ்சினஏறு உட்கொளினும்,
     பெய்யும் மழைமுகிலைப் பேணுவரால்; - வையத்து,
     இருள்பொழியும் குற்றம் பலவரினும், யார்க்கும்
     பொருள்பொழிவார் மேற்றே புகழ்"

     என வரும்.