என வரும். (32)
[ எல்லா உயிர்களையும் படைத்த பிரமன் சிவபெருமான் உகிரி னால் தலை
தகர்க்கப்பட்டான். தந்தையாகிய எச்சதத்தன் காலை வெட்டிய சண்டீசன் தன் குற்றம்
களையப்பட்டு உயர்ந்த சிறப்பை அடைந்தான். உலகில் மிக மேம்பட்டவர்கள்
நினைத்தால், நல்வினை தீவினைகளின் பயனும் மாறுபட்டுவிடும். -
என்ற இப்பாடலில், 'உலகில் .......... விபரீதமாம்' என்ற பொதுப்பொருளால்,
'தலை இழந்தான் ............ கடிந்தான்' என்ற சிறப்பொருள் விளக்கப்பட்டவாறு.
நன்மை செய்தவன் தீயபயனையும், தீமை செய்தவன் நல்ல பயனையும் பெறுதல்
விபரீதப்படுதலாம்.