"உரைப்பினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை ஆகும்." - மு. வீ. பொ. 69
"பொருள்வேற் றுமைப்படல் பொருள்வேற் றுமையே." - மு. வீ. பொ. 70
"சாதிவேற் றுமைப்படல் சாதி ஆகும்." - மு. வீ. பொ. 71
"குணவேற் றுமைப்படு வதுகுண மாகம்." - மு. வீ. பொ. 72
"முயற்சியால் வேறு படுவது முயற்சி
வேற்றுமை என்மனார் மெய்உணர்ந் தோரே." - மு. வீ. பொ. 73
"இருபொருள் புணர்ந்தவற் றியல்பெடுத் துரைப்பில்
ஏய்ப்பினும் உயரினும் இருபொருள் வேற்றுமை." - மு. வீ. பொ. 74
"வருபொருள் ஒதுங்கிவேற் றுமைப்பட வருவது
விலக்குவேற் றுமையென விளம்பப் படுமே." - மு. வீ. பொ. 75
"ஓதிய பொருள்களின் ஒன்றுஉயர் வுடைத்தென்று
அறைவது வேற்றுமை அணியெனப் படுமே." - ச. 45
"ஒப்பாம் மொழியுவ மானோவ மேயத்தின் ஒன்றினைப்பே
திப்பாம் எனில்அது வேற்றுமை." - குவ.46
ஒருபொருளான் வேற்றுமை செய்தது வருமாறு:
"அனைத்துஉலகும் சூழ்போய், அரும்பொருள் கைக்கொண்டு,
இனைத்துஅளவை என்றற்கு அரிதாம், - பனிக்கடல்;
மன்னவ! நின் சேனைபோல்; மற்றுஅது நீர்வடிவிற்று
என்னும் இதுஒன்றே வேறு"
என வரும். இது கூற்று.
[மன்னவனே! குளிர்ந்த கடலும் நின் சேனையும் ஒரே வகையான குணந்தொழில்களை உடையன, கடல், உலகம் முழுதையும் சூழ்ந்து, பல அரிய பொருள்களைத் தன்னகத்து அடக்கி, இவ்வளவு அளவுடையது என்று அளக்க உண்ணாததாய் உள்ளது; உன் சேனையும் உலகிலுள்ள பல நாடுகளையும் கைப்பற்றுதற்கு உலகம் முழுதையும் சூழ்ந்து, பகைவர் நாட்டின் அரிய பொருள்களைக் கொள்ளையிட்டுக் கவர்ந்து, இவ்வளவிற்று
|
|
|