[மிக்க தேர்ப்படையை உடைய சோழனுடைய காஞ்சி மாநகரும், பெரிய கடலும்
தம்முமடைய ஒலியினாலும் பெருமையாலும் சமமாகும் எனினும், காஞ்சிமாநகரில்
கடல்படு பொருள்கள் யாவும் கிட்டுவவாகவும், கடலில் காஞ்சி மாநகரில் கிட்டும்
பொருள்கள் யாவும் பெறப்படமாட்டா - என்ற இப்பாடலில்.
முதலில் காஞ்சி மாநகரும் கடலும் ஒக்கும் என்று கூறிப் பின் காரணம் காட்டின்
காஞ்சி மாநகர் கடலினும் மேம்பட்டது என்று வேற்றுமை செய்தவாறு. இம்மூன்று
பாடல்களும் வெளிப்படையாக வேற்றுமையைப் பெறப்பட வைத்தன.]