232

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [மக்களுக்கு இளமைப் பருவத்தில் செல்வச்செருக்கான் மனத்தில் வளரும்
 அறியாமையாகிய இருள், ஏனை உலகத்துப் புற இருளைப்போலச் சூரியன்
 ஒளியினாலும், ஒளி வீசும் விளக்கின் வெளிச்சத்தாலும், பரந்து வீசும் சந்திரன்
 ஒளியினாலும் நீக்கப்பட மாட்டாது-

     என்ற இப்பாடலில், இருள் என்ற ஒரே சாரியைச் சேர்ந்த புற இருள், அக இருள்
 என்ற இரண்டனுள புற இருள் சூரியன் சந்திரன் விளக்கு இவற்றால் போக்கப்படவும்,
 அகவிருள் இவற்றால் போக்கப்படமாட்டாது என்ற வேற்றுமை செய்தது சாதி
 வேற்றுமை ஆமாறு காண்க.

     தொழில்வேற்றுமை வருமாறு:

    "புனல்நாடர் கோமானும், பூந்துழய் மாலும்,
     வினைவகையான் வேறு படுப; - புனல்நாடன்
     ஏற்றுஎறிந்து மாற்றலர்பால் எய்தியபார், மாயவன்
     ஏற்றுஇரந்து கொண்டமையால் இன்று"

 என வரும். பிறவும் அன்ன.

     [சோழமன்னன் போரை ஏற்றுப் போர்க்களத்தில் பகைவர்களை அழித்துக்
 கைக்கொண்ட பூமியைத் திருமால் மாவலியிடம் தானமாக நீர் ஏற்று இரந்து
 பெற்றமையால், உலகைக் காத்தல் தொழிலில் ஒப்புமை உடைய சோழனும்
 திருமாலும் உலகைக் கைக்கொண்ட தொழில்திறத்தல் வேறு பட்டவராவர் -
 என்ற இப்பாடலில்,

     சோழனுக்கும் திருமாலுக்கும் உலகு புரத்தல் நிலையில் குறிப்பால் ஒப்புமை
 சுட்டிப் பின் கைப்பற்றுதல், இரந்து பெறுதல் என்ற தொழில்களால் இருவரும்
 வேறுபட்ட இயல்பபைக் கூறுதலின், இது தொழில் வேற்றுமை ஆயிற்று,]

     உரையிற் கோடலான் இவ்வேற்றுமை - விலக்கியல், சிலேடை இவற்றுடனும்
 மேவவும் பெறும் எனக்கொள்க.