விலக்கியல் வேற்றுமை வருமாறு:
"தம்மால் பயன்தூக்காது, யாவரையும் தாங்கினும்,
கைம்மாறும் காலம் உடைத்துஅன்றே; - எம்ஆவி
அன்னவனை, ஆழிஅந பாயனை, அலராள்
மன்னவனை, மானுமோ வான்?"
என வரும்.
[எம் உயிர்போல்பவனும, ஆணைச் சக்கரத்தை உடையவனாய் அபாயம் இன்றி இருப்பவனும், திருமகள் தலைவனும் ஆகிய சோழமன்னனைப் போலக் கைம்மாறு கருதாமல் எல்லோரையும் காப்பாற்று இயல்பை உடைய வானம், உதவி செய்ததற்கு ஒரு காலவரையறை உடைத்து ஆதலின், காலவரையறையின்றி எஞ்ஞான்றும் உதவும் எம்அநபாயனை ஒவ்வாது - என்ற இப்பாடலில்,
பயன் தூக்காது யாவரையும் தாங்கும் திறத்தில் வானம் சோழனை ஒக்கும் என்று கூறிப் பின் காலவரையறைறின்றி எஞ்ஞான்றும் உதவும் சோழற்குக் காலவரையறையோடு உதவும் மேகம் ஒப்பாகாது என்று விலக்கியவாறு காண்க.]
சிலேடை வேற்றுமை வருமாறு:
"ஏறுஅடர்த்து, வில்முருகி, எவ்வுலகும் கைக்கொண்டு,
மாறுஅடர்ந்து ஆழி வலவனைக், - கால்தொழுதற்கு
எஞ்சினார் இல்எனினும், மாயன், இகல்நெடுமால்;
வஞ்சியான், நீர்நாட்டார் மன்"
என வரும். (33)
[திருமாலும் சோழனும் செயலால் ஒப்பர் எனினும், திருமால்மாயன்; சோழன் வஞ்சியான் என வேற்றுமை செய்தவாறு, இதன்கண் அமைந்துள்ள சிலேடை பின்வருமாறு. திருமால் கண்ணனாய் நப்பின்னைக்காக ஏழு காளைகளையும் ஒரே நேரத்தில் அடக்கி அழித்தான்; இராமனாய்ச் சீதைக்காக வில்லை ஒடித்தான்; |
|
|