236

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     காரியம் பிறத்தலும் கடும்பகைக் காரணம்
     தன்னில் காரியம் தழைத்தலும் காரியம்
     நின்றதில் காரணம் நிலாவலும் எனஅறு
     பெற்றிய தாகும் பிறிதராய்ச்சி."                               - ச. 60 

    "நேராது காரணம் காரியம் தோன்றின் நிகழ்த்துபிறிது
     ஆராய்ச்சி அணி."                                    - குவ. அ. 34] 

     வேறொரு காரண விபாவனை வருமாறு:

    "தீஇன்றி வேம்தமியோர் சிந்தை; செழுந்தேறல்
     வாய்இன்றி மஞ்ஞை மகிழ்தூங்கும்; - வாயிலார்
     அன்றிச் சிலர்ஊடல் தீர்ந்தார்; அமர்இன்றிக்
     கன்றிச் சிலைவளைக்கும் கார்"

 என வரும்.

     [மற்ற பொருள்கள் தீயினால் வேவவும் பிரிந்து தனித்திருப்பார் உள்ளம் தீயின்
 தொடர்பு இன்றியே வேகும். கள்குடித்து மற்றவர் களிப்பவும், அக்கள்
 குடியாமலேயேமயில் களித்து ஆடும். ஊடலைத் தீர்ப்பதற்கு வாயில்கள்
 பயன்படுத்தப்படவும், சிலர்வாயில்கள் இன்றியே ஊடலைப்
 போக்கிக்கெகண்டுள்ளனர். போர் முனையயலேயே வீரர்வெகுண்டு வில்லை
 வளைக்கவும், கார்மேகம் அப்போரின்றியே வில்லை வளைக்கும் - என்ற
 இப்பாடலில், கார் காலத்தின் விளைவுகள் கூறப்பட்டள்ளன.

     இக்கார்காலம் தனித்திருப்போனை வருத்தவதும், மயிலைக் களிப்பிப்பதும்,
 ஊடலைத்தீர்ப்பதும், வானவில்லை வளைப்பதும் ஆகிய செயல்கள் - உலகுஅறி
 காரணங்கள்இன்றியே நிகழ்த்தப் பட்டன. கார்காலம் என்பது குறிப்பால்
 பெறப்பட்டவாறு, இஃதுஅயற்காரண விபாவனை எனவும் படும்.]

     இயல்பு விபாவனை வருமாறு:

    "கடையாமே கூர்த்த, கருநெடுங்கண்; தேடிப்
     படையாமே ஏய்ந்து, தனம்; பாவாய்! - கடைஞெமிரக்
     கோட்டாமே கோடும், புருவம்; குலிகச்சேறு
     ஆட்டாமே சேந்த, அடி"

 என வரும்.