[பாவாய்! உன் கரு நெடுங்கண்கள் சாணை பிடிக்காமலேயே கூர்மையைப் பெற்றுள்ளன. பிறர் தேடிப் படைக்காமலேயே உனக்குத் தனங்கள் அமைந்துள்ளன. உன் புருவங்கள் பிறர் இரு தலைப்புக்களையும் பற்றி வளைக்காமலேயே இயல்பாக வளைந்துள்ளன. சாதிலிங்கக் குழம்பு தேய்க்கப்படாமலேயே உன் அடிகள் இயல்பாகச் சிவந்துள்ளன - என்ற இப்பாடலில்,
சாணை பிடித்துக் கூர்மை செய்வதும், தேடித் தனம் படைப்பதும், இரு தலையும் பிடித்து வளைப்பதும், சாதிலிங்கம் பூசிச் சிவக்கச் செய்வதும் ஆகிய காரணங்கள் இன்றி இயல்பாகவே காரியங்கள் நிகழ்ந்துள்ளமை இயற்கையின் கூறுபாடு என்பது குறிப்பால் பெறப்பட்டவைத்தவாறு காண்க.]
குறிப்பு விபாவனை வருமாறு:
"பாயாத வேங்கை மலரப் படுமதமா
பூவாத புண்டரிகம் என்றஞ்சி, - மேவிப்
பிடிதழுவி, நின்றுஅதிரும கானில், பிழையால்,
வடிதழுவு வேலோய்! வரவு"
என வரும். இதனுள் குறிப்பு பாயும் வேங்கையைப் புலைஎனக் குறித்தல், பிறவும் அன்ன.
[வேலோனே! வேங்கை மரம் பூக்களை மலர, மதயானை அதனைப் புலி என்ற கருதி அஞ்சித் தன்னிடத்துச்சாரும் பிடியைத் தழுவிக்கொண்டு புலிக்கு மாறாகப் பிளிறும் காட்டு வழியில், நீ இரவுக்குறிக்கு வருதல் தவறான செயலாகும்" - என்று தோழி இரவுக்குறி வருதலை விலக்கிய இப்பாடலில்,
பாயும் வேங்கை, வேங்கைப் புலியாகவே, பாயாத வேங்கை வேங்கை மரம் எனவும் - பூக்கும் புண்டரிகம் தாமரை ஆகவே, பூவாத புண்டரிகம் வேங்கைப் புலி எனவும் கொள்ளவைத்தமை குறிப்பு விபாவனையாதல் காண்க.] |
|
|