ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 52, 53
"வீவில் கவிதான் கருது பொருளை வெளிப்படுத்தற்கு
ஓவிய மேசுருக் காம்மறை சொல்லின் உரைத்திடினே." - வீ. 166
"குறித்ததை மறைத்துக் குறிக்கொள நிகர்த்ததை
நுவல்வகை தாமே ஒட்டென நுவல்ப." -மா. 124
"அதுவே,
பொருள்இடம் சாதி வினைகுணம் பொழுதொடும்
மருள்அறு நெறித்தாய் வருதிறன் உடைத்தே." - மா.125
"ஓட்டெனத் தன்பொருள் உரையாது உவமை
சுட்டலின் அப்பொருள் தோன்ற இயம்பலே." - தொ. வி. 344
"எண்ணிய பொருள்மறைத் தேயது புலப்பட
வேறொரு பொருளை விளம்புவது ஒட்டே." - மு. வீ. பொ. 77
"குறித்தொரு பொருளைக் கூறற் குரியது
மற்றொரு பொருள்மேல் வழங்கல் குறிப்பு
நவற்சி அணியெண நாட்டினர் புலவர்." - ச. 113
"ஒருவற் குறித்துரைக் கின்றதை யேமற் றெருவற்குறித்து
உரைசெயின் பேரும் குறிப்பு நவிற்சி." -குவ. 87]
கருப்பொருள் நிலனாகப் புலப்பட்டு அடையும் பொருளும் அயல்பட வந்தமைக்கு வரலாறு:
"வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததுஓர் காவிக்
குறைபடுதேன் வேட்டும் குறுகும்;- நறைமதுச்சேர்ந்து,
உண்டாடும் தன்முகத்தே, செவ்வி உடையது, ஓர்
வண்தா மரைபிரிந்த வண்டு"
என வரும்.
[களித்த பல வண்டுகள் சேர்ந்து உண்டு நீக்கிவிட்ட ஒரு கருங்குவளைப் பூவிலுள்ள குறைபட்ட தேனை விரும்பி, தன்னிடத்து நிறைந்த தேனோடு வனப்பு மிக்க வளவிய செந்தாமரையைப் 31-32 |
|
|