அணியியல் - ஒட்டணி

243 

     சோலை எல்லோருக்கும் பொதுவாகவும், வள்ளல் எங்களுக்கே உரியவன் என்று
 இரவலன் சொற்றவாறு.,

     இப்பாடலில் முதல் மூன்று அடிகளும் பொதுவான அடைகள். வெளிப்படையாகக்
 குறப்பிட்ட சோலையும், குறிப்பால் பெறப்படவைத்த வள்ளலும் இருவேறுபட்ட
 பொருள்கள் ஆமாறு காண்க.]

     அடைவிரவிப் பொருள்வேறுபட வந்தமைக்கு வரலாறு:

    "தண்ணளிசேர்ந்து, இன்சொல் மருவும் தகைமைத்தாய்,
     எண்ணிய எப்பொருளும், எந்நாளும், - மண்ணுலகில்
     வந்து, நமக்களித்து வாழும் முகில்ஒன்று,
     தந்ததால் முன்னைத் தவம்"

 என வரும்.

     [இம்மண்ணுலகில் கருணை பொருந்தி, இனிய சொற்கள் கூறும் தகைமையை
 உடையதாய், நினைத்த எப்பொருளையும் எக்காலத்தும் நம் தேவை அறிந்து வந்து
 நமக்கு உதவும் மேகம் ஒன்றை நம் முன்னைய நல்வினை நமக்குத் தந்துள்ளது
 என்ற இப்பாடலில், வெளிப்படையாக அமைந்த முகில் என்பது குறிப்பால்
 வள்ளலை உணர்த்துகின்றது.

     தண்ணளி சேர்தல் முகிலுக்கும் வள்ளலுக்கும் பொதுவான அடை. இன்சொல்
 மருவுதல், எண்ணிய எப்பொருளும் எந்நாளும் வந் அளித்தல் என்ற இரண்டும்
 வள்ளற்கே அடை.

     இவ்வாறு வெளிப்படைப் பொருள் குறிப்புப் பொருள் என்ற
 இரண்டன் அடைகளும் விரவி வந்தவாறு காண்க.]

     அடைவிபரீதப்பட்டுப் பொருள்வேறுபட வந்தமைக்கு வரலாறு:

    "கடைகொல் உலகுஇயற்கை! காலத்தின் தீங்கால்
     அடைய வறிதுஆயிற்று அன்றே; - அடைவோர்க்கு,
     அருமை உடைத்துஅன்றி, அந்தேன் சுவைத்தாய்க்
     கருமை விரவாக் கடல்"

 என வரும். பிறவும் அன்ன.