அணியியல் - அதிசயவணி

245 

அதிசயவணி - இலக்கணமும் விரியும்

 655, மனப்படும் ஒருபொருள் வனப்புவிதந்துரைப்புழி,
      உலகுவரம்பு இறவா நிலைமைத்து ஆகி
      ஆன்றோர் வியப்பத் தோன்றுவது அதிசயம் ;
      பொருள் குணம் தொழில் ஐயம் துணிவே திரிவுஎனத்
      தெருள்உறத் தோன்றும் வரியினது அதுவே.

 இது நிறுத்தமுறையானே, அதிசய அலங்காலத்தின் பொது விதியும் அதன்விரியும்
 கூறுகின்றது.

     இ-ள் :   கவியால் கருதப்பட்ட ஒரு பொருளது வனப்பு மிகுத்துச்
 சொல்லுங்கால், உலகநடை இறவாத தன்மைத்துஆகி, உயர்ந்தோர் வியப்பத்
 தோன்றுவது அதிசயம் என்னும் அவங்காரமாம். பொருள் அதிசயம்
 முதலிய தெளிவுபெறத் தோன்றும் அறுகூற்று விரியினை உடைத்தாம்
 அவ்வலங்காரம் என்றவாறு.

     [இஃது உயர்வு நவிற்சியணி எனவும், மிகைமொழி எனவும், பெருக்கு எனவும்
 பெயர் பெறும்.]

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் தண்டி - 54, 55

    "அருளும் அதிசயம் ஆன்றோர் வியப்ப துலகிறவாப்
     பொருள்குணம் ஐயம்துணிவு திரிவெனப் போற்றுவரால்."        - வீ. 167 

    "காரணமும்,
    "துண்டும்அகார ணமுமாய் மிகைமொழி சொல்வர்."              - வீ. 177 

    "விதந்துஒரு பொருளினை விழுமிதின் உரைப்புழி
     உயர்ந்தோர் மதிக்குற உரைப்பது அதிசயம்."                 - மா. 143 

    "அதுவே, வையம் புகழ்பொருள் பண்பு வினைதிரிபு
     ஐயம் தெளிவெனும் ஆறினும் வருமே."                          - 44 

    "இடம்சினை காலம்என்று இவற்றொரும் சிவணும்."                 - 145