246

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "கவியால் கருதப் படும்பொரு ளதனை
     உயர்த்திக் கூறங் காலைநீர் உலக
     நடைஇற வாநிலை நழுவாது ஆன்றோர்
     வியப்பது அதிசயம் என்மனார் புலவர்."               - மூ. வீ. பொ. 78 

    "பொருள்வியப் புடையது பொருளெனப் படுமே."         - மூ. வீ. பொ. 79 

    "குணம்வியப் புடையது குணமெனப் படுமே."            - மூ. வீ. பொ. 80 

    "துணிபொருட் பெருக்கம் துணிவெனப் படுமே."          - மூ. வீ. பொ. 81 

    "திரிந்து வருவது திரிபென மொழிப."                  - மூ. வீ. பொ. 82 

    "ஒருபொருள் தன்சொலின் உரைக்கப் படாஅது
     கேட்போர் உள்மகிழ் கிளப்பதூஉம் இஃதஃது
     அன்றெனத் தெநிந்தும் ஆமெனத் துணியப்
     படுவது மாகிய பான்மையில் சேர
     ஒருபுல மாதல் உயர்வு நவிற்சி
     மற்றஃது ஏழு வகைப்படு மென்ப."                   -ச. மூ. வீ. பொ. 28 

    "அவற்றுள்,
     புகழ்பொருள் தன்னைத்ன் கிளவியிற் புகலாது
     இல்பொருள் சொல்லின் இலக்கணை யாக
     உரைப்பது உருவக உயர்வு நவிற்சி."                 -ச. மூ. வீ. பொ. 29 

    "நாட்டுமுன் உயர்வு நவிற்சி நீக்கொடு
     கூட்டி முடித்தல் ஒழிப்புயர்வு நவிற்சி."              -ச. மூ. வீ. பொ. 30 

    "தீர உருவம் செல்வம் முதலிய
     சொற்களைப் பிரித்துச் சொல்வது பிரிநிலை."         -ச. மூ. வீ. பொ. 31 

    "தொடர்பில் பொருட்குஒரு தொடர்பு புனைதலும்
     தொடர்புறூஉம் பொருட்குத் தொடர்பிலது ஆக்கலும்
     எனஇரு வகைத்தாம் தொடர்புயர் நவிற்சி."           -ச. மூ. வீ. பொ. 32 

    "காலம் ஒன்றில் காரண காரியம்
     நிகழத் தொடுத்தல் முறையிலி என்ப."               -ச. மூ. வீ. பொ. 33 

    "காரண உணர்ச்சி ஒன்றில் காரியம்
     பிறத்தல் விரைவுயர்வு நவிற்சி யாகும்."              -ச. மூ. வீ. பொ. 34