"காரியம் முன்னும் காரணம் பின்னும்,
நிகழப்புனைதல் மிகைஉயர் நவிற்சி." -ச. 35
"வயமுவ மேய மதைமொழி யாதுவ மானமதை
நயமுறச் சொல்லி அதைக்காட்டில்அன்னதுஉருவக உயர்வு நவிற்சி." - குவ. 22
"நுவற்சி பெறும்முன் னையதுஒழிப் போடு நுவலவரில்
உவப்புறு செந்தமி ழோர்இடு நாமம் ஒழிப்புஉயர்வு
நவிற்சி." - குவ. 23
"இதுவேறு எனவும் பிரித்து வருணித் திடல்பலர்க்குப்
பொதுவா கியதரு மங்களை யாகில் புகலும்பெயர்
அதுபி ரிநிலை உயர்வு நவிற்." - குவ. 24
"இயைபின் றியதை இயைபு படுத்தி இசைத்தல்தொடர்பு
உயர்வு நவிற்சி." - குவ. 25
"அடரும் இயைபுள் ளதையியை பின்றி அறையுமது
தொடர்பில் உயர்வு நவிற்சி." - குவ. 26
"உறைகா ரணமொடு காரியம் ஓர்பொழு தேஉறுதல்
முறையில் உயர்வு நவிற்சி." - குவ. 27
"வருகா ரணம்உயர் போதேஅக் காரியம் வந்திடுதல்
விரைவின் உயர்வு நவிற்சி." - குவ. 28
"அமைகா ரியங்கண் டபின்கர ரணமும்உண் டாகும்அதற்
குமிகை உயர்வு நவிற்சி என்பார்." - குவ. 29]
பொருள் அதிசயம் வருமாறு :
"பண்டு புரம்எரிப்ப, மேல்மேன் படர்ந்து, இன்றும்
அண்ட முகடு நெருப்புஅறாது ; -- ஓண்தளிர்க்கை
வில்லி நுதல்மேல் விழி",
என வரும். நெருப்பு - இடி. |
|
|