[ஒள்ளிய தளிர்போன்ற கைகளை உடைய பார்வதி தழுவுகையாலே குழைுந்தவராகிய, நெற்றியின்மேல் அழற் -கண்ணராய் மேரு மலையை வில்லாக ஏந்திய சிவபெருமான். பண்டு திரிபுரங்களைச் சிரிப்பினால் எரித்தாராக அத்தீ மென் மேலும் படர்ந்து ஓடுதலால்இன்றும் அண்டத்து உச்சியில் நெருப்பு நீங்காமல் உள்ளது - என்ற இப்பாடலில், சிவபெருமான் நகையிலிருந்து புற்ப்பட்ட நெருப்பு இன்றும் அண்டமுகட்டில் பரவியுள்ளது என்று கூறுதற்கண் பொருளதிசயம் காண்க.]
குணஅதிசயம் வருமாறு :
"மாலை நிலவுஒளிப்ப, மாதர் இழைபுனைந்த
நீல மணிகள் நிலவுஉமிழ, -- மேல்விரும்பிச்
செல்லும் இவள்குறித்த செல்வன்பால் சேர்தற்கு
வல்இருள் ஆகின்றே மறுகு"
என வரும்.
[மாலைக் காலத்தில் வெளிப்பட்ட நிலாவின் ஒளி மறையுமாறு, இந்நங்கை அணிந்த நீலமணிகள் நீலநிற ஒளியைக் காலுகையினாலே, இவள் விருப்பத்தோடு தன் தலைவன் இருப்பிடம் குறித்துச் சேர்வதனைப் பிறர் காணாத வகையில் தெருவெல்லாம் இருண்டுவிட்டது - என்ற இப்பாடலில், நீலமணிகளின் ஒளிவீசும் பண்பு மிகுத்துக் கூறப்பட்ட குண அதிசயம் காண்க.]
தொழில் அதிசயம் வருமாறு :
"ஆளும் கரியும் பரியும் சொரிகுருதி,
தோளும் தலையும் சுழித்துஎறிந்து, -- நீள்குடையும்
வாள்வார் முரசும் மறிதிரைமேல் கொண்டுஒழுக,
வெள்வாள் உறைகழித்தான் வேந்து"
என வரும்.
[காலாட்களையும் யானைகளையும் குதிரைகளையும் வெட்டி வீழ்த்துகையினாலே சொரியப்பட்ட குருதி வெள்ளம் தோள்களையும் தலைகளையும் சுழித்து மோதித்தள்ளுமாறும், நீண்ட குடைகளையும் |
|
|