252

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "பொருளை மற்றொரு பொருளியில் தொடர்பால்
     இஃதுஅஃது அன்றென எண்ணியும் அதுவென்று
     அத்தியவ சித்தல் தற்குறிப் பணிஅது
     நினைக்கின் றேன்போல் நிச்சய முண்மை
     துணிவு முதலிய சொற்களை உருபாத்
     தொக்கும் விரிந்தும் தோன்றும் என்ப."                        - ச. 26 

    "அதுவே,
     பொருள்தற் குறிப்பே ஏதுத்தற் குறிப்பே
     பயன்தற் குறிப்பெனப் பகுதிமூன்று அவற்றுள்
     புலன்விரி தொகையெனப் பொருள்தற் குறிப்புஇரு
     பாலா மொழிந்த பொருளுளது இலதுஎன
     இவ்விரண் டாகும் என்மனார் புலவர்."                           " 27 

    "ஒன்றாம் பொருளைமற் றோர்பொரு ளாகஉள் ஏதுபயன்
     இன்றவை ஏது பயனாக யூகித்த லேதற்குறிப்பு
     என்றும் புலத்தின் அவைமுன் விரிதொகை என்றுபின்னா
     நின்றவை உண்மைஇன் மையென்றும் ஆறு நிகழ்த்துவரே."     - குவ. 21] 

     இயங்கு திணைத் தற்குறிப்பேற்றம் வருமாறு :

    "மண்படுதோள் கிள்ளி மதயானை, மாற்றரசர்
     வெண்குடையைத் தேய்த்த வெகுளியால், -- விண்படர்ந்து
     பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
     தேயும், தெளிவிசும்பின் நின்று"

 என வரும்.

     [பகைவர் நிலத்தைக் கவரும் தோள் வலிமையை உடைய சோழனது மதயானை
 பகையரசர்களுடைய வெண்கொற்றக் குடைகளை அழித்தும் வெகுளி குறையாமையால்,
 அக்குடைகளை நிகர்க்கும் தன் மீதும் வானை நோக்கிப் பாயுமோ என்று குளிர்ந்த
 நிறைமதியும் வானத்தில், தேய்ந்து, தான் குடையன்று என்று வேறுபட்ட தன்
 உருவத்தைக காட்டுகிறது போலும் - என்ற