[சான்றோர் நுமக்காக முயன்ற முயற்சியையும் நும்முடைய வானத்தை அளாவியது
போன்ற குடிப்பிறப்பின் சிறப்பையும் நோக்கி நுமக்கு இவளை மணம் செய்து
கொடுப்பார்" என்ற பாடற் பகுதியில் "வாவி தோய்வு அன்ன" என்பது
தற்குறிப்பேற்றம். இதன்கண் "அன்ன" என்ற சொல் வந்தவாறு.
"விரும்பத்தக்க தேரினை உடைய சூரியன் எங்கும் தன்கைகளைப் பரப்பி,
சோலைகளில் உள்ள தேன் பொருந்திய மலர்களைத் திறப்பான்; மேலும், தன்
வருகையால் தோற்ற இருள் போய் ஒளிந்திருக்கும் இடத்தைத் தேடிப் பார்ப்பவனைப்
போலத் தாமரையின் முடிய இதழ்களை விரித்துப் பார்ப்பான்" - என்ற இப்பாடலில்,
கதிரவன் வருகையால் பூக்கள் மலருதல் இயற்கையாகவும் அதற்கு ஒரு
தற்குறிப்பேற்றத்தைக் கவி கற்பனை செய்தவாறு.
இப்பாடலின்கண் "போல்" என்ற சொல் வந்தவாறு.]
37