256

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "ஏது என்பது இதனின் இஃது ஆயதென்று
     ஓதுவ தாமென உரைத்தனர் புலவர்."                         - மா. 186 

    "அதுவே, காரகம் ஞாபகம் எனஇரு காட்சிய."                  - மா. 187 

    "அவற்றுள்,
     முதலது முதல்வனும் கருவியும் கருமமும்
     காலமும் இடனும் கண்ணிய நெறித்தாய்ப்
     போக்கறு பொருளொடும் புகல்இரு மூன்றினும்
     ஆக்கமும் அழிவுமென்று அமர்தரு விரித்தே,"                 - மா.188                  

    "ஏவல் முதல்வன் இயற்றுதல் முதல்வனென்று
     ஆவயின் வருமதல் வனமிரண் டாகும்."                      - மா. 189 

    "ஏனைய தொன்றும் வெளிப்பட மற்றது
     தான்உணர் விற்புலப் படுந்தன் மையதாய்க்
     காரணம் காரியம் தாம்உறழ்ந்து உணர்த்தும்
     சால்பினும் நடைபெறும் சாற்றுங் காலே."                     - மா. 190 

    "எய்திய இன்பம் துன்பம் இவற்றிற்கு
     ஐயமில் பான்மை ஆக்கமும் அழிவும்."                       - மா. 191 

    "இருளற அறிவிப் பனவாம் ஏதுவும்
     பொருளிடம் வினைபண்பு அவற்றொடும் புணரும்."            - மா. 192 

    "இன்மையும் அதன்கண் எய்துதல் உரித்தே."                  - மா. 193 

    "அதுவே, ஒன்றினொன் றி்ன்மை உள்ளதன் இன்மை
     என்றுமின் மையினோடு இன்மையின் இன்மை
     அழிவுபாட் டின்மையோ ரைந்தா கும்பே."                    - மா. 194 

    "காரியம் முந்துற காரகம் காரண
     காரியம் ஒருங்குறு காட்சி யுத்தமும்
     அயுத்தமும் எனமேல் அறைந்ததோ டொன்றும்."              - மா. 195 

    "உணர்வுறின் ஐய ஏதுவும் உளவே."                          - மா. 196 

    "காரியம் அயலதாய்க் கழிதிறன் அசங்கதி."                   - மா. 203 

    "அதுவே, சிலேடையின் எய்தும் திறனும் உடைததே."           - மா. 204 

    "ஓதும்ஏ தேனும் ஒருபொருள் திறத்தால்
     ஈது விளைந்ததென் றியம்புவது ஏது."                 - மு. வீ. பொ. 84