சேர்ந்து, சந்தனத்தின் குளிர்ச்சியைப் பொருந்தி, சந்திரனுடைய குளிர்ந்த வெள்ளிய கிரணங்களில் தோய்ந்து, பிரிந்திருப்பாருடைய மனத்தையும் உயிரையும் வாடச் செய்யும் என்ற இப்பாடலில்,
தமிழ் மாருதம் என்ற கருத்தா, தனி இருந்தோர் சிந்தையும் உயிரும் உணக்குதலாகிய அழிவுச் செயல, அருவியக் கலத்தல், சந்தனத்த அளைதல், சந்திரன் கதிர்களில் தோய்தல் ஆகிய காரணங்களால் செயற்படுத்தியவாறு.]
கரும காரகஏது வருமாறு :
"மலையின், அலைகடலின், வாள்அரவின் வெய்ய
தலையில் பயின்ற தவத்தால், -- தலைமசேர்
அம்மாதர் புல்லும் அபயன் புயம்புணர்தற்கு,
எம்மா தவம்புரிந்தேம் யாம்?"
என வரும்.
["விந்தியமலையிலும், அலையஉடைய கடலிலும் ஆதிசேடனுடய தலையிலும் செய்த தவத்தினாலே மேம்பட்ட சயமடந்தை, திருமகள், நிலமகள் என்ற மகளிர் தழுவும் அநபாயனாகிய சோழனுடைய புயத்தைத் தழுவுதற்கு நாம் ஒரு மாதவமும் செய்யவில்லய!? என்று சோழன் பவனி வரக் கண்ட தலைவியொருத்தியின் கைக்கிளக் கூற்றாக அமைந்த இப்பாடலில், சயமடந்தை முதலியோர் மலையிலும் கடலிலும் பாம்பின் தலையிலும் செய்த தவமாகிய கருமமே அவர்கள அநபாயன் புயம் புணர்த்தலாகிய காரகத்த வெளிப்படுத்தியவாறு.]
கருவிக் காரகஎது வருமாறு :
"கரகடத்தால் மாரியும், கண்ணால் வெயிலும்,
நிரவயிரக் கோட்டால் நிலவும் -- சொரியுமால் ;
நீள்ஆர்த் தொடைஅதுலன், நேரார் கலிங்கத்து,
வாளால் கவர்ந்த வளம்"
என வரும். பிறவும் வந்துழிக் காண்க. |
|
|