அணியியல் - ஏதுவணி

259 

     [நீண்ட ஆத்திப்பூ மாலையை அணிந்த ஒப்பற்றவனாகிய சோழன் பகைவருடைய
 கலிங்க நாட்டில் இருந்து தன் வாள் வலிமையால் கைப்பற்றிய யானைக்கூட்டம்,
 மதத்தால் மழையையும், கண்ணால் வெயிலையும், கோட்டால் நிலவையும் சொரியும் -
 என்ற இப்பாாடலில், மதம் ஒழுகும் கபோலங்கள், கண்கள், கோடுகள் ஆகிய
 கருவிகள் மாரி, வெயில், நிலவு ஆகிய காரகங்களை வெளிப்படுத்தியவாறு.

    "இமிழ்திரைநீர் ஞாலம் இருள்விழுங்கச் சோதி
     உமிழ்கதிரும் புள்ளும் ஒடுங்க - அமிழ்தொத்து
     அருள்மாலை எய்தா தவர்மனம்போல் மாலும்
     மருள்மாலை வந்தென் மனம்"

 எனக் காலக் காரக ஏதுவும்,

    "சங்கன் அழியாத் தமனியநா டெய்தியதும்
     பொங்குபுகழ்த் தாந்தன் புலவீர்காள் -- எங்கோனாம்
     சோதிபதம் எய்தியதும் சொற்றமிழ்மா றன்அருள்கூர்
     ஆதிநகர்த் தெய்விகத் தால்"

 என இடக்காரக ஏதுவும் மாறன் அலங்காரத்தில் எடுத்துக்காட்டால்
 விளக்கப்பட்டவாறு,                                             - மா. 189] 

     ஞாபகஏது வருமாறு :

    "காதலன்மேல் ஊடல் கரைஇறத்தல் காட்டுமால் ;
     மாதர் நுதல்வியர்ப்ப, வாய்துடிப்ப, -- மீது
     மருங்குவளை வில்முரிய, வாள்இடுக நீண்ட
     கருங்குவளை சேந்த கருத்து"

 என வரும். பிறவும் அன்ன.                                           (38) 

     [இம்மகள் தன் நெற்றியில் வியர்வை துளிப்ப, புருவம் வளைய, வாளைவென்று
 நீண்ட கருங்குவளை போன்ற கண்கள் செந்நிறம் அடைய இருக்கும்
 இம்மெய்ப்பாடுகளின் உட்கிடக்கை தன் கணவனிடத்தில் அளவு கடந்த ஊடல்
 கொண்டுள்ளாள்