260

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 என்பதனைக் காட்டும் - என்ற இப்பாடலில், காரணம் நேராகக் கூறப்படாமல்
 காரியங்களைக் கண்டு அறிவால் உணருமாறு கூறப்பட்டிருத்தல் ஞாபக ஏதுவாம். இது
 காரியங்களால் காரணம் புலப்பட்ட ஞாபக ஏது.

    "அணியார்பொற் றோளும் அயில்விழியும் சற்றும்
     தணியா திடந்துடிக்குஞ் சால்பான் -- மணிமாடக்
     கோயிலார் வெற்பிற் கொடியிடையாய் வைகறைநம்
     வாயிலாாங் காவலர்தேர் வந்து"

 என்ற மாறனலங்கார எடுத்துக்காட்டுப் பாடல் காரணம் கண்டு காரியம் புலப்பட்ட
 ஞாபக ஏதுவாம். இஞ்ஞாபக ஏது - பொருள் இடம், வினை, பண்பு என்று
 பலவகையாக எடுத்துக்காட்டுடன் மாறன் அலங்காரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

- மா. 191, 192] 

38 

     மேலதற்கு ஓர் ஒழிபு

 658. அபாவம் தானும் அதன்பால் படும் ; அஃது
     என்றும் அபாவமும்1 இன்மையது அபாவமும்2
     ஒன்றின்ஒன்று அபாவமும்3 உள்ளதன் அபாவமும்4
     அழிவுபாட்டு அபாவமும்5 எனஐந்து ஆகும்.

     இது மேலதற்கு ஓர் ஒழிபு கூறுகின்றது.

     இ-ள் :   ஒன்றினது இன்மையும் அவ்வேதுவின் திறத்ததாம். அஃது
 எக்காலத்தும் இல்லாமையும், இல்லாமையது இல்லாமையும், ஒன்றினது இன்மையும்
 அதன்கண் அஃது இன்மையும், ஓரிடத்தும் ஒருகாலத்தும் உள்ள பொருள் பிறிதோர்
 இடத்தும் பிறிது ஒரு காலத்தும் இல்லாமையும், முன் உள்ளது அழிவுபட்டு
 இல்லாமையும் என ஐவகைப்படும் என்றவாறு