அணியியல் - ஏதுவணி

263 

     உள்ளதன் அபாவஏது வருமாறு :

    "கரவொடு நின்றார் கடிமனையில், கைஏற்று,
     இரவொடு நிற்பித்தது என்னை ; -- அரவொடு
     மோட்டுஆமை பூண்ட முதல்வனை முன்வணங்க
     மாட்டாமை பூண்ட மனம்"

 என வரும்.

     [அரவினையும் ஆமை ஒட்டினையும் அணிந்த சிவபெருமானை முற்பிறப்பில்
 வணங்குவதற்கு இசையாத என் உள்ளம், இப்பிறப்பில், இருப்பதனை மறைத்துப்
 பிறருக்கு ஈதலில்லாத இவறன் மாலையரின் காலையுடைய வீட்டிற்குச்சென்று
 கைஏற்றுப் பிச்சை எடுக்கும் நிலையில் என்னை வைத்துள்ளது என்ற இப்பாடலில்,

     இப்பிறப்பில் உலோபிகளிடத்துப் பிச்சை ஏற்று உயிர்வாழும் செயல், சென்ற
 பிறப்பில் இறைவனை வணங்காத செயலைத் தெரிவிக்கின்றது. இவ்வுலகத்து
 இப்பொழுது உள்ள செயல் முற்பிறப்பில் ஒருகாலத்தும் இல்லாத செயலை
 அறிவிக்கின்றது. மனம் முதல்வனை வணங்கமாட்டாமை என்ற ஏதுவினால்
 இரவொடு நிற்பித்தலாகிய செயல் நிகழ்ந்தவாறு.]

     அழிவுபாட்டு அபாஏது வருமாறு :

    "கழிந்தது இளமை ; களிமயக்கம் தீர்ந்தது ;
     ஒழிந்தது காதல்மேல் ஊக்கம் ; -- சுழிந்து
     கருநெறிசேர் கூந்தலார் காதல்நோய் தீர்ந்தது ;
     ஒருநெறியே சேர்ந்தது உளம்"

 என வரும். பிறவும் அன்ன.                                           (39) 

     [இளமை கழியவே, களிப்பும் மயக்கமும் நீங்கவே, காதலிடத்துள்ள ஊக்கம்
 ஒழிந்ததனால் சுருண்ட நெறிப்பை உடைய கூந்தலராகிய மகளிர்மாட்டுளதாகிய
 ஆசை நீங்கி உள்ளம் ஒப்பற்ற நன்னெறியைச் சேர்ந்துவிட்டது - என்ற இப்பாடலில்,