264

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 முன்பிருந்த இளமை, களி, மயக்கம், காதல் என்பன அழிவுபட்டு இலவாயின
 செயல் மனம் ஒப்பற்ற நெறியைச் சேருவதற்கு உதவியதாகக் காரணம் கூறப்பட்டமை
 அழிபாட்டபாவமாதல் காண்க.]                                          39 

மேலும் ஓர் ஒழிபு

 659. தூர காரியமும்1 ஒருங்குஉடன் தோற்றமும்2
      காரியம் முந்துஉறூவும் காரண நிலையும்3
      உயுத்தமும்4, அயுத்தமும்,5 முத்தையோடு இயலும்.

     இதுவும் அது.

     இ-ள் :   ஒருவழிக் காரணம் நிகழப் பிறிது ஒருவழிக் காரியம் நிகழ்தலும்,
 காரண காரியங்கள் ஒருங்கு நிகழ்தலும், காரணத்தின் முன்னர்க் காரியம் நிகழ்தலும்
 காரணத்திற்கு ஏற்ற காரியம் நிகழ்தலும், காரணத்திற்கு ஏலாக்காரியம் நிகழ்தலும்
 ஆகிய இவ்வனைத்தும் முன்னை அலங்காரத்தோடு ஒத்து நடக்கும் என்றவாறு.

விளக்கம்

     [தூரகாரியஏது அசங்கதி எனப்பட்டு மாறனலங்கார ஆசிரியரால் தனி
 அணியாகக் கொள்ளப்பட்டுள்ளது.

     தண்டியார் "காரணம் முந்துஉறூஉம் காரியநிலை" என்று பாடம் கொள்வர்.
 கருத்து இருவருக்கும் ஒன்றே.]

ஒத்த நூற்பாக்கள்

(முழுதும் தண்டி - 63)

     தூர காரியஏது வருமாறு :

    "வேறுஒரு மாதர்மேல் வேந்தன் நகநுதியால்
     ஊறுதர, இம்மாது உயிர்வாடும் ; -- வேறே
     இருவரே மெய்வடிவின் ஏந்திழை நல்லார்,
     ஒருவரே தம்மில் உயிர்"

 என வரும்.