அணியியல் - ஏதுவணி

265 

     [தலைவன் தலைவி உணருமாறு வேறொரு பெண்ணின்மேல் நகக்குறியிட்டானகத்
 தலைவி அது பொறாது உயிர்வாடுகிறாள். இருவராகிய இப்பெண்கள் வடிவில்
 வெவ்வேறாக அமைந்து இருப்பினும் ஓருயிர் உடையார் போலும் - என்ற இப்பாடலில்,

     நகக்குறி இடுதலாகிய காரணம் ஓரிடத்து நிகழ அதன் காரியமாகிய உயிர்வாடுதல்
 பிறிது ஓரிடத்து நிகழ்ந்தவாறு, தலைவி உயிர் வாடுதற்குச் சேய்மையில் தலைவன்
 பிறள் ஒருத்தியிடம் நிகழ்த்திய செயல் ஏதுவாதலின், இது தூரகாரிய ஏதுவாயிற்று.]

     ஒருங்கு உடன் தோற்றஏது வருமாறு ;

    "விரிந்த மதிநிலவின் மேம்பாடும், வேட்கை
     பிரிந்த சிலைமதவேள போரும், -- பிரிந்தார்
     நிறைதளர்வும் ஒக்க நிகழ்ந்தனவால், ஆவி
     பொறைதளரும் புன்மாலைப் போது"


 என வரும்.

     [கிரணங்கள் விரிந்த சந்திரனுடைய ஒளியின் மேம்பாடும், விருப்பத்தை
 விளைவித்த வில்லேந்திய மன்மதனுடைய போரும், பிரிந்திருப்பவர் உள்ளத்து
 அடக்கம் தளர்தலும், உயிர் தடுமாறும் அற்பமாகிய மாலைக் காலத்தில் ஒரு
 சேர நிகழ்ந்தன - என்ற இப்பாடலில்,]

     நிலவின் மேம்பாடு, மதவேள் போர் என்ற காரணங்களும் பிரிந்தார் நிறை
 தளர்வாகிய காரியமும் ஒருசேர நிகழ்ந்தவாறு காண்க. இவ்வாறு காரணமும் ஒரே
 நேரத்தில் நிகழ்வது ஒருங்குடன் தோற்றமாகும்.]

     காரியம் முந்துஉறூஉம் காரண நிலைஏது வருமாறு :

    "தம்புரவு பூண்டோர் பிரியத் தனிஇருந்த
     வம்புஉலவு கோதையர்க்கு, தாரவேள் -- அம்பு
     பொரும்என்று, மெல்ஆகம் புண்கூர்ந்த ; மாலை
     வரும்என்று இருண்ட மனம்"

 என வரும்.