268

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

நுட்பவணி

 660. தெரிபுவேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்
     அறிதுஉணர் வினைத்திறன் நுட்பம் ஆகும்.

     இது நிறுத்த முறையானே நுட்பம் என்னும் அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : தெரிந்து வேறுபடக் கிளவாது, குறிப்பினான் ஆதல், தொழிலினான்
 ஆதல், அரிதாக நோக்கி உணரும் தொழில் தன்மையை உடையது நுட்பம் என்னும்
 அலங்காரமாம் என்றவாறு.

     [இவ்வணி நுணுக்கம் எனவும் பரிகரம் எனவும் பெயர் பெறும்.]

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 64

    "திகழும் நுணுக்கம் குறிப்பின் தொழிலின் திறமுணர்த்தல்."       - வீ. 169 

    "உரைத்தது போன்றுறு தொனிப்பல தொடைமொழி்
     நிரைப்பன இன்றியும் நிபுணர்நுட் பம்மெனாஅ
     ஆங்குரைத் ததுவுமாய் நோக்கமைந்து ஏது
     நீங்கலின் நிலைமொழிச் சங்கையை வருமொழி
     பாங்குறப் பாதுகாத் திடும்திடம் பரிகரம்."                    - மா. 233 

    "அதுவே,
     குறிப்பினும் தொழிலினும் தமிகுறிக் கொளலாய்
     வெளிப்பட லொடும்விர வியும்வரும் வகைத்தே."          - மா. மா. 234 

    "நுட்பம் தெளிவுற நுவலா தவற்றையும்
     உட்படுத் திடுங்குறிப் புரைஅரிது உணர்த்தாலே."         - தொ. வி. 347