"தெண்ணிறப் பளிங்கிற் சிறுபுழைச் செந்நூல்
ஒண்ணிறம் புறம்பொசிந்து ஒளிரும் படித்தாய்க்
கருத்தினை வெளியிடும் காமர்சத் துவங்களை
அருத்தியின் மறைத்துரைப் பதுவே இலேசம்." - மா. 200
"மெய்ம்மயிர் பொடித்தல் வெதும்பல் வெயர்த்தல்
துய்யபொற் பசலை தோன்றல் நடுக்குறல்
விழிபுனல் அரும்பல் வெவ்வுயிர்ப்பு ஆவத்தல்
மொழிதளர் வுறல்நகை முதலய சத்துவம்." - மா. 201
"இலேசமே கருததொளித் திடஅதைக் காட்டும்
சத்துவம் பிறிதின் சாற்றி மறைத்தலே." - தொ. வி. 353
"தான்கரு தியவெளிப் படுக்கும் சத்துவம்
வேறோன் றாலே விளைந்தன வாக
மறைத்துக் கூறுவது இலேசம் ஆகும்." - மு. வீ. பொ. 86
"ஒன்றனைப் பழித்தும் புகழ்ந்தும் உரைப்பது
மற்றதன் பாற்படும் வழுத்துங் காலே." - மு. வீ. பொ. 87
"கோதைக் குணம்என வும்குண மானதைக் கோதுஎனவும்
ஓதப் பெறுவது இலேசம்." - குவ. அ. 72
"குணம்குறை மாறிக் கூறுகூது இலேசம்." - ச. 98
"ஒருகா ரணத்தால் உதித்த சத்துவ
குணத்தைப் பிறிதுஓர் காரணம் கூறி
மறைத்து மொழிதல் வஞ்ச நவிற்சி. - ச. 112
"மற்றெறரு ஏது அதனை உரைத்துண் மையை மறைத்தற்கு
உற்றிடு போது வஞ்ச நவிற்சி." - குவ. அ. 86]