276

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "அவற்றுள்,
     பெயரொடு பெயர்நிர லுதல்பெயர் நிரல்நிறை."               - மா. 163 

    "பெயர்எதிர் நிரலுதல் பெயர்எதிர் நிரல்நிறை."                - மா. 164 

    "உயர்வுறு பெயரொடு வினைஉற நிரல்வது
     மயர்வறு பெயர்வினை நிரல்நிறை எனவரும்."                - மா. 165 

    "ஓதிய பெயரினோடு உயர்வினை எதிரின்
     நீதிகொள் பெயர்வினை எதிர்நிரல் நிறையாம்."               - மா. 166 

    "வினையொடு வினைநிரல் வதுவினை நிரல்நிறை."              - மா. 167 

    "வினைஎதிர் நிரல்வது வினைஎதிர் நிரல்நிறை"                - மா. 168 

    "வினைபெயர் நிரல்வது வினைபெயர் நிரல்நிறை"              - மா. 169 

    "வினையொடு பெயர்எதிர் கொளவரு நிரல்நிறை
     வினையொடு பெயர்எதிர் விதிநிரல் நிறையே."               - மா. 170 

    "இருபெயர்க் கடைநா லெழுத்தைமுறை மாறிப்
     பொழிப்புறப் பிரித்துப் புணர்த்தும் நிறைவகை
     எழுத்து நிரல்நிறை என்மனார் புலவர்."                      - மா. 171 

    "முறைமுறை நிரைவது முறைநிரல் நிறையே."                   - மா. 172 

    "இணைபெற இடைநின்று இருவயின் பெயரொடும்
     புணர்தகை நிரல்நிறை புகலிலொன் றுளதே."                  - மா. 173 

    "உரைபயில் முதல்ஈற்று உறும்பெய ரொடுபெயர்
     நிரைநின்ற எதிர்பெய நிகழ்ந்தீ றொடுமுதல்
     புரைதீர் தாவில் பூட்டுறு வதும்உள."                         - மா. 174 

    "பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
     நிரல்நிறை யாக நிறுத்திமற்று ஒருபொருள்
     நேரும் பொருள்கோள் நிரல்நிறை ஆகும்.         - மு. வீ. செய். அ. 25 

    "நிறுத்த முறையே நெறிப்படப் பொருளைக்
     குறித்தல் நிரல்நிறை எனக்கூறு றுவரே."                       - ச. 76 

    "வரிசையில் கூறும் பொருள்கட்குச் சம்பந்த பாவமுறை
     தெரிவுறச் சொல்லல் நிரல்நிறை."                           - குவ. 50]