வரலாறு :
"காரிகையார் மென்மொழியால், நோக்கால், கதிர்முலையால்,
வார்புருவத்தால், இடையால், வாய்த்தளிரால், - நேர்தொலைந்த ;
கொல்லி, வடிநெடுவேல், கோங்கரும்பு, வாங்குசிலை,
வல்லி, கவிர்மென் மலர்"
எனவும்,
[மகளிருடைய மென்மொழியால் கொல்லிப்பண் ஒப்பழிந்தது; நோக்கால் வடிக்கப்பட்ட நெடியவேல் ஒப்பழிந்தது ; ஒளிவீசும் முலையால் கோங்கம் மொட்டு ஒப்பு அழிந்தது ; நேரிய புருவத்தால் வளைந்தவில் ஒப்பு அழிந்தது ; இடையால் கொடி ஒப்பு அழிந்தது ; வாயாகிய தளிரால் முள்முருங்கைப்பூ ஒப்பழிந்தது - என மொழி, நோக்கு, முலை, புருவம், இடை, வாய் என்பனவற்றின் ஒப்பான பொருள்களாகிய கொல்லி, வேல், கோங்கரும்பு, சிலை, வல்லி, கவிர்மலர் என்பன முறையே இப்பாடற்கண் நிறுத்தப்ட்டமை காண்க.]
"மயில்களிக்கும், வண்டுஆர்க்கும், வார்தளவம் பூக்கும்,
குயில்ஒளிக்கும், கோபம்பரக்கும், -- வெயில்ஒளிக்கும்
கானம் குழைகொள்ளும், காந்தள் துடுப்புஎடுக்கும்,
வானம் பொழியும் மழை"
எனவும் வரும். இத்திறத்தன எல்லாம் சொல் ஓத்தினுள் கண்டு கொள்க. 44
[மயில்கள் களிக்கும், வண்டுகள் ஒலிக்கும், முல்லை பூக்கும், குயில்கள் கூடுகளில் போய் மறையும், இந்திர கோபப்பூச்சிகள் பரவும், கதிரவன் ஒளி மறையும், காடுகளில் மரங்கள் தளிர்க்கும், காந்தள் மொட்டுவிடும். வானம் மழை பொழியும் - என்ற இப்பாடலில், முடிக்கப்படும் சொல்லும் முறையே அமைந்துள்ள நிரல்நிறை காண்க.
இந்நிரல்நிறைஅணி மாறன் அலங்காரத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது.] 44 |
|
|