278

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

ஆர்வமொழியணி

 664. ஆர்வமொழி மிகுப்பது ஆர்வ மொழியே.

     இது நிறுத்தமுறையானே ஆர்வமொழி அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : உள்நிகழ்ந்த ஆர்மொழியால், தோன்றிச் சொல்லுவது ஆர்வமொழி
 என்னும் அலங்காரம் என்றவாறு.

     உள் நிகழ்தல் மேல்வரும் அலங்காரத்தால் பெற்றாம்.

     [இது மகிழ்ச்சியணி எனவும் கூறப்பெறும்]

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 68

    "விரவும் மகிழ்ச்சி உளநிகழ் ஆர்வம் விளம்புமொழி."           - வீ. 170 

    "விழுமிதின் ஆர்வ மொழிமிகுத் துரைப்பது
     பழிதீர் ஆர்வ மொழியெனப் பகர்வர்."                      - மா. 211] 

     வரலாறு :

    "சொல்ல மொழிதளர்ந்து சோரும் ; துணைமலர்த்தோள்
     புல்ல இருதோள் புடைபெயரா ; -- மெல்ல
     நினைவோம் எனின்நெஞ்ச இடம்பெறாது ; எம்பால்
     வனைதாராய் ! வந்ததற்கு மாறு"

 எனவரும். மாறு -     ஒப்பு.                                           45 

     [அணி செய்யும் மாலையை அணிந்தவனே ! நீ எம் இருப்பிடம் நோக்கிவந்த
 உன்னுடைய மேதகவுக்கு யாம் என்ன கைம்மாறு செய்தல் இயலம்? எம்
 நன்றியறிதலைச் சொற்களால் வெளியிடுவோம் என்றால் நின்னிடத்து யாம்
 கொண்ட அன்பாலும்