280

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளின்
     மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடு ; அதுதான்
     நகையே அழுகை இளிவரல் மருட்கை
     அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
     அப்பால் எட்டாம்."                                     - இ. வி. 578 

 என்ற நூற்பாப் பகுதியானும் போதரும்.

 சுவையணி இரதவணி எனவும் பெயர் பெறும்.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் (சிறிது திரிபுடன்) - தண்டி. 69. 70

    "உரிய சுவைதான் இரதம்."                                   - வீ. 170 

    "பொறியுணர் வொடும்ஒரு பொருளினை எதிர்ந்த
     நெறியுடை மனத்துள் நிகழ்தரும் பான்மை
     அயலவர் உறப்புறத் தாய்பொருள் எட்டின்
     இயல்வது சுவைஎன்று இயம்பினர் புலவர்."                   - மா. 179 

    "அவைதாம்,
     பெருமிதம் நடுக்கம் அழுகை இளிவரல்
     உருத்திரம் நகைவியப்பு உவகைஎன் றாகும்."                 - மா. 198 

    "சுவைஅணி என்ப சுடும்சினம் காமம்
     வியப்புஅவலம் இழிபுஅச்சம் வீரம் நகைஎன
     மேன்மைப் பாட்டின் இயைவன கூறி
     உள்மெய்ப் பாட்டை உணர்ததிக் தோற்றலே."           - தொ. வி. 354 

    "புந்தியின் நிகழ்திறன் புறத்துப் புலனாய்
     விளங்க எண்வகை மெய்ப்பாட் டானும்
     ஒழுகல் சுவைஎன உரைக்கப் படுமே."                - மு. வீ. பொ. 88 

    "அவைதாம்,
     அச்சமும் வீரமும் அவலமும் காமமும்
     இழிபும் வியப்பும் எழில்படு நகையும்
     உருத்திர மும்மென உரைக்கப் படுமே."               - மு. வீ. பொ. 89