வியப்புச்சுவை வருமாறு :
"முத்துஅரும்பிச் செம்பொன் முறிததைந்து, பைந்துகிரின்
தொத்துஅலர்ந்து, பல்கலனும் சூழ்ந்துஒளிரும்-கொத்தினதாம்
பொன்ஏர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன்
தன்நேர் பொழியும் தரு"
என வரும். [பொன்னையும் அழகிய மணிகளையும் கொழிக்கும் பொலிவுடைய காவிரி பாயும் நாட்டையுடைய சோழ மன்னனுக்கு நிகராகக் கொடுக்கும் கற்பக மரம், முத்துக்களை அரும்பிப் பொன்மயமான தளிர்கள் செறிந்து பவழத்தின் கொத்து மலர்ந்து பல அணிகலன்களும் சூழ்ந்து ஒளி வீசும் கிளைகளையுடையது - என்ற இப்பாடலில், முத்து, பொன், பவளம் முதலியவற்றை மரம் தன் உறுப்புக்களாகக் கொண்டிருக்கும் வியப்புப் புலப்படுத்தப்பட்டவாறு.
"புதுமை பெருமை சிறுமை ஆக்கமென
மதிமை சாலா மருட்கை நான்கே" - தொ. மெ. 7
என்ற வியப்பின் நிலைக்களன்கள் நான்கனுள் இதன்கண் புதுமை பற்றி மருட்கை பிறந்தவாறு.]
காமச்சுவை வருமாறு :
"திங்கள் நுதல்வியர்க்கும் ; வாய்துடிக்கும், கண்சிவக்கும்,
அங்கைத் தளிர்நடுங்கும் ; சொல் அசையும், -- கொங்கை
பொருகாலும் ஊடிப் புடைபெயருங் காலும்,
இருகாலும் ஒக்கம் இவட்கு"
என வரும்.
[தலைவியோடு கூடும்போதும், அவள் ஊடலால் பிரிந்திருக்கும்போதும் பிறை போன்ற நெற்றி வியர்த்தலானும் வாய் துடித்தலானும் கண்கள் சிவத்தலானும் கைகளாகய தளிர்கள் நடுங்குதலானும் சொற்கள் தடுமாறுதலானும் அவளுக்கு |
|
|