286

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "எள்ளல் இளமை பேதைமை மடனென
     உள்ளப் பட்ட நகைநான்கு என்ப"                       - தொ. மெ. 10 

 என்பதனுள் இதன்கண் நகை எளளல் நிலைக்களனாகப் பிறந்தவாறு. இந்நூல் 578ஆம்
 நூற்பாவுரையுள் சுவைகளின் விரிவான விளக்கங்களைக் காண்க.]               46 

தன்மேம்பாட்டுரையணி

 666. தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை.

     இது நிறுத்தமுறையானே தன்மேற்பாட்டுரை அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :  ஒருவன் தன்னைத் தானே மேம்பாடு தோன்ற உரைப்பது
 தன்மேம்பாட்டுரை என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     இஃது அகத்திணைப் பொருள்பற்றி வருங்கால் தலை மகன் தன்னைத்தானே
 புகழ்தல் எனவும், புறப்பொருள் பற்றி வருங்கால் நெடுமொழிகூறல் எனவும்
 பெயர் பெற்று வரும் எனக்கொள்க.

     [இவ்வணி ஊக்கம் எனவும் நெடுமொழி எனவும் கூறப்பெறும். தலைவன்
 தோழியிடம் தன் பெருமையைக் கூறுதல் அகத்திணைக்கண் காணப்படுவது. வீரன்
 எதிர்த்த பகைவரிடமும், போருக்குப் புறப்படும்போதும் தன் பெருமையைக் கூறுவது
 புறத்திணைக்கண்ணது.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் தண்டி - 71

    "மேம்பாட்டுரை ஊக்கம் என்ப."                              - வீ. 170 

    "இகல்புரிந்து ஒருவன் இருநிலத் தும்தனை
     நிகரிலை எனமேம் படுத்துதல் நெடுமொழி.                   - மா. 212